Share via:
தமிழக முதல்வர் விஜய் அடுத்து இந்தியப் பிரதமராகிறார் என்று தவெகவினர்
தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்கள். இது, காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான சிக்கலை
ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல்காந்தியே சரியான தேர்வு என்கிறார்கள்.
இந்த நிலையில் ராகுல்காந்தியைவிட, விஜய்யே பெஸ்ட் சாய்ஸ் என்று
சோஷியல் மீடியாவில் நிறைய காரணங்களை பட்டியல் போடுகிறார்கள். இந்த காரணங்களைப் பார்த்தாலே
விஜய் பெஸ்ட் சாய்ஸ் என்பது புரியும் என்கிறார்கள். இதோ அந்த காரணங்கள்.
1. ராகுல் காந்தி வாரிசு அரசியல். அதாவது நேரு குடும்பத்தின் ஐந்தாம்
தலைமுறை அரசியல் வாரிசாக, எந்தவொரு சுய அரசியலும் போராட்டமும் இன்றி கட்சியின் உச்சப்
பதவிகளை அடைந்தவர். ஆனால் விஜய், அரசியல் பின்னணி எதுவும் இன்றி தனது சொந்த உழைப்பாலும்,
மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இந்த உயரத்தை எட்டிய ஒரு தலைவர்.
இந்திய ஜனநாயகத்தில் வாரிசு அரசியலை வெறுக்கும் இன்றைய இளைஞர்களுக்கு விஜய்யே முதன்மை
விருப்பம்.
2. ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகப்
பல மாநிலத் தேர்தல்களிலும், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளையே
சந்தித்தது. ஆனால் விஜய்யோ, களமிறங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக-காங்கிரஸ்
உள்ளிட்ட 22 கட்சிகளின் அதிகார பலத்தை எதிர்த்து நின்று, தனித்து 35% வாக்குகளை அறுவடை
செய்து முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்துக் காட்டியவர்.
3. பல ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ராகுல்
காந்தி முகாமிட்டும் அவரால் அங்குள்ள வாக்காளர்களை முழுமையாகக் கவர முடியவில்லை. ஆனால்,
இந்தி பேசும் மாநிலங்களில் விஜய் நடித்த திரைப்படங்கள் மூலமும், தற்போது உருவாகியுள்ள
டிஜிட்டல் அலையின் மூலமும் சாதாரண இளைஞர்களிடம்கூட விஜய்க்கான வசீகரமும் ஏற்பும் ராகுலை
விட மிக அதிகமாக உள்ளது.
4. ஆட்சிக்கு வந்து வெறும் மூன்றே மாதங்களில், ‘மூட் ஆஃப் தி நேஷன்’
தேசியக் கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவுடன் விஜய் நாட்டின் மூன்றாவது சிறந்த பிரதமர்
தேர்வாக உருவெடுத்துள்ளார்.
5. முதலமைச்சர் விஜய் மீதோ அல்லது அவரது தவெக நிர்வாகத்தின் மீதோ
இதுவரை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேடு புகார்களும் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு
அவரது பொதுவாழ்க்கை முற்றிலும் தூய்மையானதாக உள்ளது.
6. ராகுல் காந்தி இதுவரை எந்தவொரு அரசுப் பொறுப்பிலோ, அமைச்சரவையிலோ
அல்லது முதலமைச்சர் பதவியிலோ அமர்ந்து நிர்வாகத் திறமையை நிரூபித்ததே இல்லை. ஆனால்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே துரிதமான நடவடிக்கைகள், தவறுகளைத் திருத்திக்கொள்ளும்
அணுகுமுறை, மற்றும் சாமானியர்களுக்கான மக்கள் நலத் திட்டங்கள் மூலம் விஜய் ஒரு சிறந்த
நிர்வாகி என்பதை நிரூபித்துள்ளார்.
7. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே சினிமா மற்றும் அரசியல்
வழியே பெண்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விஜய் விளங்குகிறார். குடும்பத் தலைவிகள்,
கல்லூரி மாணவிகள் மற்றும் தாய்மார்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு தலைவராக விஜய் இருப்பதால்,
தேர்தல் களத்தில் வாக்குச் சாவடிகளில் இது மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறுகிறது. வடஇந்திய
பெண்களின் சாய்ஸ் ராகுலை விட விஜய்தான்.
8. சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே பல நூறு கோடி ரூபாய்
சம்பளத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். அதே துணிச்சலோடு, கூட்டணிக்
கட்சிகளின் மிரட்டல்களுக்கும் பணியாமல் தவெகவின் தேசியக் கொள்கையில் அசைக்க முடியாத
உறுதியோடு நிற்கிறார்.
9. விஜய், பிற கட்சிகளின் தயவின்றி தன் சொந்தக் கட்சியின் தோள்களிலேயே
கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெற வைக்கும் வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ளார்.
10. முதல்வர் விஜய், தேசிய அரசியலுக்கு முற்றிலும் புதிய, நேர்மறையான,
புத்துணர்ச்சியூட்டும் ஒரு தேசிய மாற்றாகக் களத்தில் நிற்கிறார். எனவே தான் நடுநிலை
வாக்காளர்களும், பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்றுத் தலைவராக விஜய்யை நோக்கித் தங்களது
பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

