News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

எப்போது வரும் என்று பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு திட்டம் தொடரும் என தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஒரு கோடியே 31 லட்சம் மகளிர்க்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் தமிழ்நாட்டில் தலைமைச் செயலக அதிகாரிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடுமையாக உழைக்கிறார்கள். விஜய் காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் உடனடியாக முடிகிறதா அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கிறார் என்றெல்லாம் ஒரு பக்கம் பாராட்டு கிடைக்கிறது.

இந்த நிலையில் விஜய்யால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸ்தான ஜோதிடர்  ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் ஒவ்வொரு சேனலிலும் அமர்ந்து விஜய்க்கு ஜால்ரா போடுவது போன்று பல்வேறு தகவல்கள் சொல்லிவருகிறார்.

அதாவது, அடுத்த 40, 50 வருஷம் விஜய்தான் சி.எம். அடுத்து பிரதமர் ஆவார். அதன்பிறகு உலக அளவில் அமெரிக்க, ரஷ்யாவுக்கு பிரச்னை வந்தால் விஜய் தீர்த்துவைப்பார் என்று அடித்துக் கூறுகிறார்.

அதேபோல் விஜய் இப்போது வைத்துக்கொள்ளும் அரகஜா பொட்டு இவரது வழிகாட்டுதல் என்கிறார்கள். புனுகு, ஜவ்வாது, வெட்டிவேர், பச்சைக்கற்பூரம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களைச் சேர்த்து, அரைத்துத் தயாரிக்கப்படும் அரகஜா, கோயிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுகிறது. இது, கண் திருஷ்டி நீக்கவும், வசீகரச் சக்தி தரவும் இது பயன்படும் என்று சொல்லப்படுகிறது.

கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து விஜய் இந்த பொட்டை அவ்வப்போது வைத்துவந்த விஜய் இப்போது நிரந்திரமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இது தீயசக்தியை விரட்டுமாம்.

விஜய்யை என்ன செய்யப்போகிறாரோ..? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link