News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் வென்றால் மாதம் ஒரு முறை அவர்களை வந்து சந்திப்பதாக விஜய் உறுதியளித்திருக்கிறார். அதோடு திருமணத்துக்குத் தங்கம், மாதம் 2,500 ரூபாய்,என்று திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

விஜய்யின் முக்கியமான 10 வாக்குறுதிகளைப் பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பதை பறை சாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 – ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் – மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுச்சேலை – பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு 15,000 கல்வி உதவி – மகளிர் குழுக்களுக்கு 5 லட்சம் வட்டியில்லா கடன்

2. உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம் – உறைவிடத்துடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள் – அனைத்து அரசுப்பளிக்களிலும் உலகத்தர நவீன கட்டமைப்பு – உயர்கல்விக்கு 20 லட்சம் வரை கல்விக்கடன் – AI தொழில்நுட்பத்துடன் போட்டித் தேர்வு பயிற்சி

3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம் – போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு – குடும்பத்திற்கு 25 லட்சம் மருத்துவக் காப்பீடு – அனைத்து ஊர்களிலும் நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை – ஆண்டுதோறும் கட்டணமில்லா சுகாதாரப் பரிசோதனை

4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாதத் திட்டங்கள் – வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4,000 வரை உதவித்தொகை – 10,000 வரை ஊதியத்தில் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் – தொழில் தொடங்க 25 லட்சம் கடன் – 18,000 ஊதியத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை

5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்கள் – 5 ஏக்கர் வரை முழு கடன் தள்ளுபடி; அதற்கு மேல் 50% தள்ளுபடி – நிலமுடைய விவசாயிகளுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி – MSP: நெல் குவிண்டால் 3,500; கரும்பு டன் 4,500 – விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10,000 – 5 லட்சம் சோலார் பம்புகள், 100% பயிர் காப்பீடு

6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் – மீன்பிடித் தடைகால நிவாரணம் 27,000 – 25 லட்சம் விபத்துக் காப்பீடு – மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) – அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள்

7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் – முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3,000 – மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் – அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் – நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா

8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம் – மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) – ஒப்பந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டில் பணி நிரந்தரம் – அங்கன்வாடி ஊழியர்களுக்கு 18,000; சுகாதார உதவியாளர்களுக்கு 10,000 ஊதியம் – பணி ஓய்வின் போது 15 லட்சம் – சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்தரம்

9. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உத்தரவாதம் – 2036-க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரம் – MSME-களுக்கு 15,000 கோடி ஆதரவு, 50,00,000 மேம்பாட்டு நிதி – மாவட்ட வாரியான வளர்ச்சிக்கான ‘மாஸ்டர் பிளான்’ – பிரத்யேக AI அமைச்சகம், பல்கலைக்கழகம், AI நகரம் – தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்

10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம் – அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் – அனைத்து அரசு சேவைகளுக்கும் சட்டப்பூர்வக் காலக்கெடு – லஞ்சமில்லா நிர்வாகம் – நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம் – சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.

இத்தனை சீக்கிரம் தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டார் என்று அவரது கட்சியினரே கிண்டல் செய்கிறார்கள். வரும் கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும்போது விஜய் மட்டுமே ஜெயிப்பார். அப்படி ஜெயித்தால் தனி மனிதராக சட்டசபைக்குப் போவாரா விஜய்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link