Share via:
தொகுதி சீரமைப்பில் தமிழகத்துக்கு முதலில் அல்வா கொடுப்பது போன்று
கொடுத்து, பின்னர் ஆப்பு வைக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துச்சொல்கிறார்கள்.
நேற்றைய தினம் அமித்ஷா, ‘’தமிழக மக்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த
விரும்புகிறேன் 543 பேர் கொண்ட அவையில், 39 எம்பிக்கள் தமிழகம் பெற்றுள்ளது அதன் சதவீதம்
7.18%. அதில் கூடுதலாக 50% தொகுதிகள் அதிகரித்து, தமிழகத்தின் மொத்த மக்களவை இடங்கள்
59 ஆக உயரப் போகிறது. தமிழகத்தின் பலம் 7.18% இருந்து 7.23% ஆக உயரும் தமிழகத்திற்கு
எந்த வித பாதிப்பும் இல்லை.
கேரளா: 20 இடங்களிலிருந்து 10 இடங்கள் கூடுதலாகப் பெற்று 30 இடங்களாக
உயரும். ஆந்திரப் பிரதேசம்: 25 இடங்களிலிருந்து 13 இடங்கள் கூடுதலாகப் பெற்று 38 இடங்களாக
உயரும். தெலங்கானா: 17 இடங்களிலிருந்து 9 இடங்கள் கூடுதலாகப் பெற்று 26 இடங்களாக உயரும்.
மகாராஷ்டிரா: உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா,
24 இடங்களை கூடுதலாகப் பெறும்…’’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், இது சொல்வது போன்று எளிதல்ல என்கிறார்கள். முதலில் எல்லோருக்கும்
50% கூட்டுவார்கள். அதன்பிறகு மறுசீரமைப்பு கமிட்டி மக்கள் தொகை அடிப்படையில் அந்த
எண்ணிக்கையை கூட்டவும் குறைக்கவும் செய்யும் என்கிறார் ப.சிதம்பரம்.
அதாவது, தமிழ்நாட்டிற்கு இப்போது 39 இடங்கள் உள்ளன. இது 543 உறுப்பினர்
கொண்ட லோக்சபாவில் 7.2% பங்களிப்பு ஆகும். புதிய 850 இடங்களில் தமிழ்நாட்டிற்கு 58
இடங்கள் வரை கிடைக்கும். அதன்பிறகு கமிட்டி மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கும்போது
விகிதாசாரப் பங்களிப்பு 6.7% ஆக குறையும். தமிழ்நாடு இடங்களில் அதிகம் பெறுகிறது என்று
தோன்றும், ஆனால் சபையில் நமது குரல் சுருங்கிவிடும்…’’ என்று கொந்தளிக்கிறார்கள்.
இதைத்தான் ஆ.ராசா, ‘’அரசியலமைப்புச் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி,
முதலில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவிற்கு இந்த அவையில் உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.அவை
அனுமதி பெற்ற பிறகு, அதற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.இந்த
நடைமுறைகள் முடிந்த பின்னர்தான், அதனடிப்படையில் அரசியல் சாசன திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில்
கொண்டு வர முடியும்.இந்த முறையான படிநிலைகளைப் பின்பற்றாமல், நேரடியாகச் சட்டத்திருத்த
மசோதாவைக் கொண்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இப்படிச் செய்தால்
நாம் இந்த அவையில் விவாதிக்கும் அத்தனையுமே பின்னாளில் சட்டத்திற்குப் புறம்பானதாக
மாறிவிடும் அபாயம் உள்ளது” என்கிறார்.
