News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சட்டமன்றத்தில் திமுகவின் கடந்த கால ஊழல்களை தவெக அமைச்சர்கள் பேசியபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, ‘’சும்மா ஊழல், ஊழல் சொல்லாதீங்க இருந்தா நடவடிக்கை எடுங்க’’ என்று சத்தம் போட்டுப் பேசினார். அதற்கு பதிலடி கொடுப்பது போன்று இன்று நேருவுக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது.

எங்கள் தளபதி விஜய்யுடன் மோதினால் இப்படித்தான், திங்களன்று சட்டசபைக்கு வருவாரா நேரு என்று தவெக தொண்டர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

பல்வேறு நிறுவனங்களை மிரட்டி கட்சிக்கு பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக குற்றச்சாட்டு அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களுக்கு கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு அவரது சகோதரர் கேஎன் ரவிச்சந்திரன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை 6:00 மணி முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது

வேலை வாங்கித் தருவதாக அப்பாவி இளைஞர்களிடம் பண மோசடி செய்த முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு , ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் நடத்தி வரும் கே என் நேருவின் சகோதரர் கே என் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகமெங்கும் அதிரடியாக இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

நேருவுக்கு ஆதரவாக வந்த திமுக தொண்டர்களை, ‘யாரும் இங்கே நிற்க வேண்டாம்’ என்று அவரே விரட்டியனுப்பினார். ஃபைலை ஓப்பன் செய்யுங்க என்று தில்லாகப் பேசிய திமுகவினர் இப்போது, ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று கொதிக்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link