News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், நெரிசலைத் தவிர்க்க தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ள விவகாரம் செம சர்ச்சையாகியுள்ளது.

முதல்வர் பிரிவுக்குப் புகார் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு ரசீது கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலே இதற்கு எப்போதும் மவுஸ் அதிகம்.

ஆனால், இப்போது தலைமைச்செயலகத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் வாசலிலே புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பணம் செலவழித்து, தங்கள் ஒரு நாளை செலவழித்து வந்து இந்த பெட்டிக்குள் புகார் போட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இதற்குப் பதிலாக ஊரில் இருந்து தபாலிலே அனுப்பிவிடலாமே, எதற்காக தலைமைச் செயலகம் வரை வரவேண்டும் என்று கேட்கிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள், ‘’தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இந்த புகார் பெட்டியில் மனுக்களை போட நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமை செயலகத்திற்கு வெளியில் புகார் பெட்டி இடமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது.’’ என்கிறார்கள்.
அதிகாரிகளை நேரில் புகார் அளித்தால் விரைந்து தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை நிலவி வந்த நிலையில், புகார் பெட்டியில் மட்டும் மனுக்களை போட்டு விட்டு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதான் மாற்றமா முதல்வரே..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link