Share via:
அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் செய்தி நாளை அறிவிக்கப்பட
இருப்பதாகத் தெரிகிறது. நேற்றைய தினம் பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர்
நிதின் நவீனை டெல்லியில் சந்தித்து அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து தனது முடிவு குறித்து
விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி சென்ற அண்ணாமலை, 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை,
பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் தேசியத் தலைவர் நிதின்
நவீன் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார். அந்த கடிதத்தில், கடின
உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது, மூத்த தலைவர்களால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டது
குறித்துப் பட்டியல் போட்டிருக்கிறார்.
அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை நீண்ட
விளக்கம் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்சனைகள் குறித்தும்
விவரமாக கூறி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு முழு விவரத்தையும் அண்ணாமலை
அவர்கள் கூறியிருக்கிறார்.
அவர் தனியே கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடன் நல்ல நட்பு ரீதியில்
தான் இருப்பேன் என அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற
தேர்தலிலும் எவ்வாறு வாக்குகள் உயர்ந்தது குறைந்தது என்பன விளக்கமான உரையை அமித்ஷாவிடம்
கூறியிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களும் அண்ணாமலையைச் சமாதானப்படுத்த
முயன்றனர். எனினும் தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னமும்
பாஜக அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்கவில்லை.
ஆனாலும்ல் அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ம் தேதி (நாளை),
அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம் மற்றும் தேசியம் ஆகியவற்றை இரு கண்களாகக் கொண்டு
புதிய அரசியல் இயக்கம் தொடங்குவார். இதுவே பின்னர் கட்சியாக மாற்றப்படும். பாஜகவுடன்
கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதால்,
அண்ணாமலை மூலம் புதிய கூட்டணி உருவாக்கும் நாடகமே இது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.