கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு !

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க […]
25 சீட் போதுமா… இன்னும் கேளுங்க திருமா..? டிரோல் செய்யும் உடன்பிறப்புகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருந்துகொண்டே தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுத்துவந்த ஆதவ் அர்ஜுனாவை இப்போது தான் வெளியே அனுப்பினார் திருமாவளவன். இனிமேல் கூட்டணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் வன்னியரசு அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார். தி.மு.க. அரசில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் 25 தொகுதிகள் கேட்போம் என்று கேட்ட விவகாரம் படு வைரலாகியுள்ளது. திருமாவளவன் அனுமதியின்றி இப்படி பேசியிருக்க மாட்டார் என்பதால் […]
கரூர் கம்பெனியின் டாஸ்மாக் கொள்ளை இத்தனை கோடியா..? அதிரவைக்கும் திராவிட ஊழல்

மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொன்ன ஸ்டாலின் ஆட்சியில் அமோகமாக டாஸ்மாக் ஊழல் நடக்கிறது என்பது தான் இப்போதைய ஹாட் டாபிக். ஒரு தந்தையாகக் கேட்டுக்கொள்கிறேன் குடிக்காதீங்க என்று அட்வைஸ் தரும் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்தே டாஸ்மாக் கடையில் சட்டத்துக்குப் புறம்பாக கரூர் கும்பல் புதிய வழியில் வசூல் வேட்டை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்துப் பேசும் பா.ஜ.க.வினர், ‘’தமிழ்நாடு முழுவதும் சுமார் 5400 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, கடையுடன் இணைக்கப்பட்ட பார்கள் 3240 உள்ளது, அது […]
5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களை தேர்வில் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கக் கூடாது என்கிற கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயின்று வரும் அனைத்து […]
நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு! பின்னணியில் முதல்வரா?

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா2 ரிலீசானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. திரைப்படம் ரிலீசாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் இயங்கி வரும் சந்தியா திரையரங்கில் படம் ரிலீசானது. இதில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லு […]
மத்திய அமைச்சர் இப்படி பேசினாரா..? அன்பில் மகேஷ் ஓப்பன் டாக்

“மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதி தருகிறோம் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் வெளிப்படையாகப் பேசினார் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது வைரலாக மாறியிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, “கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைப்பிரசேதங்களில் […]
விஜயகாந்த் குரு பூஜையில் பன்னீருக்கு முதல் மரியாதை..? திசை மாறும் பிரேமலதா

இறந்த தலைவர்களின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்துவது வழக்கமான நிகழ்வு. ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு பிரேமலதா திட்டமிட்டு செயல்படுவதாக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை குரு பூஜையாகக் கொண்டாட பிரேமலதா திட்டமிட்டுள்ளார். இது குறித்து பேசிய பிரேமலதா […]
தேர்தல் ஆணையம் ரகசிய சட்டத்திருத்தம்.? இவிஎம் மோசடிக்கு சாதகம்

இவிஎம் தேர்தல் குறித்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்ககூடாது என்பதன் அடிப்படையில் இரவுவோடு இரவாக தேர்தல் நடைமுறை திருத்த சட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் வாக்குச்சாவடியில் வைக்கப்படும் ஃபுட்டேஜ் முதலான தகவல் இனி யாருக்கும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டன. இது குறித்து […]
இறைதூதருக்கு சீமான் அவமானம்..? கொதிக்கும் இஸ்லாமியர்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியென்றாலும் தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு கட்சிகளை இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில்லை. அதனால் இஸ்லாமியர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்த காரணத்தாலே அண்ணாமலை வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கோவையில் பிரசாரம் செய்கிறார். அதே பாணியில் சீமான் இறைதூதர் குறித்துப் பேசியிருப்பது கடும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பேசிய சீமான், ‘’இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுடைய ஆறாவது கடமை தி.மு.க.வுக்கு வாக்கலிப்பது என்ற […]
அண்ணாமலைக்கு வில்லங்கமான ஆறு கேள்விகள்… பதில் சொல்ல தில்லு இருக்குதா..?

ஒரு காலத்தில் அண்ணாமலையின் ஆதரவாளராக வலம் வந்தவர் திருச்சி சூர்யா. தமிழிசை செளந்தரராஜனை ரவுண்டு கட்டி அடித்ததில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அவர் அண்ணாமலைக்கு வில்லனாக மாறி வில்லங்கக் கேள்விகள் எழுப்பியிருக்கிறார். ஸ்டாலின், சீமானை எல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யும் அண்ணாமலை இதுவரை திருச்சி சூர்யா கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். இதற்காவது பதில் சொல்வாரா என்று பார்க்கலாம். திருச்சி சூர்யா இன்று, ‘’அண்ணாமலை அண்ணனுக்கு வணக்கங்க. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற […]

