News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ஆளுநர் ரவிக்கு தி.மு.க. செம ரிவீட்டு… ராஜ்பவன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் ஆரம்பம் முதலே மோதல் நிலவி வருகிறது என்றாலும் கடந்த சுதந்திர தினத்தன்று யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டது பெரும் திருப்பமாக கருதப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநரும் தி.மு.க. அரசும் கடுமையான மோதலை தொடர்ந்து வருகிறது. முரசொலியில் ஆளுநருக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தேசிய கீதத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தார். இதை சட்டமன்றத்திலே கண்டித்த […]

அஜித் வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவா, உதயநிதியா? அரசியல் அக்கப்போர்

நடிகர் அஜித்குமார் கார் ரேசில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி அடைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதியா… ஜெயலலிதாவா என்று அக்கப்போர் மோதல் நடக்கிறது. துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. அஜித்குமார் தனது […]

கடலில் பாலம் கட்டுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு..? கவர்னர் விழாவுக்குப் பிறகு அறிவிப்பு

தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில், மீனவப் பெண்கள் 64 பானைகளில் பொங்கல் வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 65வது பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிறகு, வரவேற்பு நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அவர் மீனவ மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் ஆளுநர் பேசுகையில், ‘’எனது இதயத்துக்கும் […]

சீமானுக்கு அண்ணாமலையின் பொங்கல் பரிசு..? டெபாசிட் வாங்க வைக்கும் திட்டம்

சீமானை தி.மு.க.வினர் தொடர்ந்து டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லாத கட்சி என்று தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த விமர்சனத்தை அடித்து நொறுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகி நிற்பதாகக் கூறப்படுகிறது. தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றதும் பா.ஜ.க. களத்தில் இறங்கி அதிக வாக்குகளை வாங்கி முக்கிய […]

நீட் அறிக்கைக்கு அடுத்து பரந்தூர், விஜய் அரசியல் டூர் ஆரம்பம்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பொய்யாகப் பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்து தி.மு.க. ஏமாற்றிவிட்டது என்று த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விஜய் முதல் டூர் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கிறார்கள். விஜய் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘’எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் […]

எங்கே சார் அந்த தமிழக அரசு லெட்டர்..? சர்ச்சையில் மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம்

தென்மாவட்ட மக்களின் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறைக்கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வந்த திட்டமான மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயில்பாதை திட்டத்தை வேண்டாம் என்று தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]

ராஜ்பவனுக்கு மான் பூங்கா மிரட்டல்..? கவர்னர் ரவிக்கு சிக்கல் மேல் சிக்கல்

இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியபோது, கவர்னர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறார். அரசால் தயாரிக்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை; ஆனால் திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான், ஆளுநர் குறியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதோடு, முதல் ஆண்டு திராவிட அரசு எழுதிக்கொடுத்த உரையை முழுமையாகப் படித்தார். அதன் பிறகு வேண்டுமென்றே ஏதேனும் இடையூறு செய்துவருகிறார். சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் […]

விஜய் கட்சியை புஸ்ஸி தான் வைச்சிருக்காரா..? வைரலாகும் ஆப்சென்ட் சர்ச்சை

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்வதையே நடிகர் விஜய் செயல்படுத்துகிறார், விஜய்க்கென எந்த அரசியல் பார்வையும் பாதையும் இல்லை என்று சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.  இந்நிலையில் இன்று கூட்டப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்பது அரசியல் அதிர்ச்சியாகியுள்ளது. சென்னை பனையூரில் இன்று காலை தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும், கட்சி உட்கட்டமைப்பு […]

சீமானுக்கும் பெரியாருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா..? போட்டுத் தாக்குறாங்கப்பா

பெரியாரை அப்பா அப்பான்னு கூப்பிட்ட அந்த பெண்தான் பிற்காலத்தில் அவர் மணந்த மணியம்மை. அப்பா என்று கூப்பிட்ட ஒரு பெண்ணை மணந்தவருக்கு மற்ற உறவுகளை மாற்று எண்ணத்தில் கண்டிப்பாக பார்த்திருப்பார் எண்ணியிருப்பார் என்றே யூகிக்க முடிகிறது. எனவே, காம இச்சையை பெற்றவளிடம் தீர்த்துக்கொள் என்று நிச்சயம் பெரியார் சொல்லியிருப்பார் என்று நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமானுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் உள்ள உறவுகளை எடுத்துப் […]

விஜய் கட்சிக்கு 2% ஓட்டு..? ஆடியோ சிக்கலில் புஸ்ஸி ஆனந்த்

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அவரது ஆளுமையை நிரூபித்துக் காட்டினார். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் விஜய் கட்சி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில் விஜய் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக சொல்லப்படும் ஆடியோ கட்சிக்குள் கடும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த ஆடியோவில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி பேசுகையில், […]