News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

இளையராஜா பாணியில் வைரமுத்து வசூல் வேட்டை..? வைரமுத்து மட்டும் காப்பி அடிக்கலாமா..?

இசைஞானி இளையராஜா காப்பிரைட் விவகாரத்தில் கறாராக இருந்து, யார் அவரது பாடலை பயன்படுத்தினாலும் பணத்தை வாங்கிவிடுகிறார். அதே பாணியில், தன்னுடைய வரிகளுக்கும் பணம் வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதுகுறித்து பேசியிருக்கும் வைரமுத்து, ‘’என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா… பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, […]

பிரேமலதாவுக்கு திடீர் எச்சரிக்கை.. மாசெ கூட்டம் அறிவிப்பு

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே இப்போது கூட்டணிக்கு எந்த அவசரமும் இல்லை. ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த மாதத்திற்குள் கூட்டணி முடிவு அறிவிக்க வேண்டும் இல்லையெனில் அணியில் இடமில்லை என்று டெல்லி திட்டவட்டமாக அறிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒன்றுபட்ட வலிமையான கூட்டணியாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதனாலே இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் […]

அண்ணாமலை மீது அமித்ஷா நடவடிக்கை…? அதிமுக நேரில் புகார்

மத்திய உள்துறை அமிச்சர் அமித்ஷாவை எடப்பாடி வரவேற்பார் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ மட்டுமே வரவேற்புகொடுத்திருக்கிறார்கள். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும்அதிமுகவையும் திட்டமிட்டு அவமதிப்பு செய்வதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்தார்அமித்ஷா. அந்த வழியில் இன்றைய தினம் அன்புமணி, பிரேமலதா ஆகியோரை மேடை ஏற்றுவதற்கு திட்டம்போட்டிருந்தார். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் தங்கள் அதிமுக எதிர்ப்பைக்கைவிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார். […]

திமுக ஷாக் சர்வே. விஜய்க்கு முதல்வர் பதவி..?

தமிழக தேர்தல் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இப்போது திமுக, அதிமுக, விஜய் மற்றும் சீமான் என நான்குமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இன்றைய நிலவரம் குறித்து திமுக எடுத்த சர்வே நிலவரம் கலவரம் என்கிறார்கள். திமுகவில் இருந்து மும்பையைச் சேர்ந்த மோரீஸ் நிறுவனத்தை அணுகி சர்வே எடுக்கக் கேட்டுள்ளார்கள். அதன்படி மண்டலவாரியாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி திமுக கூட்டணிக்கு 70 முதல் 85 தொகுதிகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக அதிமுகவுக்கு 60 […]

ராமதாஸை மிரட்டினாரா அமித்ஷா..? தைலாபுரம் கப்சிப்

இன்று மதுரைக்கு வரும் அமித்ஷா முன்னிலயில் பா.ம.க. கூட்டணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாமக மோதல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் ராமதாஸ் மிரட்டப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அமித்ஷா இன்று இரவு மதுரைக்கு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இன்றைய தினம் அன்புமணியின் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது. […]

அன்புமணி தூதருக்கு நாக் அவுட்..? அமித்ஷா விவகாரத்தில் ராமதாஸ் பிடிவாதம்

தமிழகம் வர இருக்கும் அமித்ஷா முன்னிலையில் பா.ம.க. கூட்டணிக் கட்சியாக சேர்ப்பதற்குத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வின் திட்டத்தை செயல்படுத்த முயன்ற குருமூர்த்திக்கு கெட் அவுட் சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதனால் அப்பா, மகன் பஞ்சாயத்து இன்னமும் முடிவில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பா.ம.க.வில் அன்புமணியைத் தாண்டி தன் மகளின் பிள்ளைகளை நுழைப்பதற்கு டாக்டர் ராமதாஸ் தீவிர முயற்சி எடுத்துவருகிறார். இதனை அன்புமணி தொடர்ந்து முறியடித்துவந்தார். இந்நிலையில் சமாதானப்படுத்துவதற்கு குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பாமகவில் […]

மாப்பிள்ளை சாரிடம் ஆசிர்வாதம்..? இன்பநிதியை பார்த்தாச்சா..?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதிமையத்துக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் தனபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரும் துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி, ஆற்காடு வீராசாமி என ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள். அதேபோல் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சந்தித்துவருகிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் […]

ராமதாஸிடம் அன்புமணி சரண்டர்…? முடிவுக்கு வரும் குடும்ப நாடகம்

பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்தில் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் மோதல் எழுந்தது. எல்லா மாவட்டச் செயலாளர்களும் தன் பக்கம் இருக்கும் தைரியத்தில் அன்புமணி ரொம்பவும் தெம்பாக அய்யாவுடன் மோதிவந்தார். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதனால், இன்று அன்புமணி சரண்டர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் திடீரென டாக்டர் ராமதாஸை சந்திக்க வந்தார். அதோடு மற்ற மாவட்டச் செயலாளர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் என்ன […]

மாணவிகளை அசிங்கப்படுத்திய வக்கிர வேல்முருகன்…? விஜய் டீம் எச்சரிக்கை

நடிகர் விஜய்யை அன்புடன் கட்டிப்பிடித்து அண்ணாவென்று அன்பு செலுத்தும் மாணவிகள் குறித்து வில்லங்கக் கருத்து கூறியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இந்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! அவரின் மாணவிகள் மீதான அருவருக்கத்தக்க கருத்தை திரும்ப பெற வேண்டும் இல்லைஎன்றால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். பரிசு வழங்கும் விழாவில் மாணவிகள் ஆர்வத்துடன் விஜய்யைக் கட்டிப்பிடித்து அன்பைப் பொழிகிறார்கள். இதை எப்படி ஒரு […]

அண்ணாமலை பாணியில் எடப்பாடி பழனிசாமி நடைபயணம்..? திமுக, விஜய்க்குக் குடைச்சல்

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழகம் முழுக்க இருக்கும் நிர்வாகிகளை ஒன்று திரட்டுவதற்கும் ஒரு யாத்திரை நடத்த இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை செல்ல இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் […]