News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

எடப்பாடியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கப்சிப்…. நெல்லையில் ஸ்பெஷல் விருந்து

ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டாலும் இன்னமும் தெளிவு கிடைக்கவே இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்த ”கூட்டணி ஆட்சி” என்ற கருத்து மீண்டும் மீண்டும் அதிமுக தரப்பை கோபப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு அதிரடியாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாட் பழனிசாமி பேசுகையில், ‘’பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அந்த அளவிற்கு ஏமாளிகள் நாங்கள் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து […]

எடப்பாடிக்கு குஷியான சர்வே ரிசல்ட்… விஜய், சீமானுக்கு எத்தனை சீட் தெரியுமா?

தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்வே தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ஆளும் திமுகவுக்கு கடுமையான போட்டியாக அதிமுக இருக்கிறது என்பது திமுகவினரை அதிர வைக்கிறது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் உள்ளது, யார் மீண்டும் முதலமைச்சராக வர மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், எந்த கட்சி ஆட்சியமைக்கும், யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியகள் ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு […]

விஜய் உருவாக்கும் மக்கள் நலக் கூட்டணி. திமுகவுக்கு நல்ல யோகமடா

அதிமுக கூட்டணியில் விஜய் சேரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் தனியே நின்று வாக்குகளைப் பிரிப்பார். அதோடு அவருடன் பெரிய கட்சிகள் யாரும் கூட்டணி சேர்வதாகவும் தெரியவில்லை. எனவே குட்டிக்குட்டி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இது குறித்து பேசும் பத்திரிகையாளர், ‘’இன்றைய சூழலில் தவெக இளையதலைமுறையினர் வாக்குகள் பெறுவதில் முன்னிலையில் இருந்தாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் பலவீனமாக […]

ஜெயிலுக்குப் போகிறாரா நயினார் நாகேந்திரன்..? குஷியில் அண்ணாமலை

தமிழகத் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அண்ணாமலைக்கு இன்னமும் பதவி வழங்கப்படவில்லை. மீண்டும் தலைவர் பதவிக்கு அவர் குறி வைத்திருக்கிறார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கல் ஏற்படும் வகையில் தேர்தலுக்குப் பிடிபட்ட பண விவகாரம் மாறிவகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது ஓட்டுக்குப் பணம் வாங்கிய வழக்கு இருக்கிறது. பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும், 2024 ஏப்ரலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.98 கோடி பணத்திற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக […]

விஜய், சீமான் கட்சிகளுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை.? பிரமாண்டமாகும் கூட்டணி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்கிறார்.  தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து சில கேள்விகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.   2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? 2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். […]

வில்லங்கமாகும் காமராஜர் ஏசி விவகாரம்… காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைக்குமா?

ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார், காமராஜர் ஒரு செயின் ஸ்மோக்கர் என்றெல்ல்லாம் திமுகவினர் திட்டமிட்டு பரபரப்பைக் கிளப்பிவருகிறார்கள். இதையடுத்து திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இது, தேர்தல் கூட்டணியை உடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஏசின்னு சொல்லி காமராஜரை அசிங்கப்படுத்தறானுங்க ஓசின்னு சொல்லி மக்களை அசிங்கப்படுத்துறானுங்ககாமராசர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றவர்கள் இன்று காமராசர் தொடர்ச்சியாக சிகரெட் […]

சீமானை விரட்டி வெளுக்கும் கம்யூனிஸ்ட்கள்… நாம் தமிழருக்கு மாதர் சங்கம் எச்சரிக்கை

விஜய் வருகைக்குப் பிறகு நாம் தமிழர் சீமான் பேச்சுக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. அவர் எங்கு பேசினாலும் பெரிய அளவுக்கு வைரல் ஆவதும் இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் போராட்டக் குணத்தையே மறந்துவிட்டார்கள், கம்யூனிஸ்ட் கட்சி செத்துப்போச்சு என்று விமர்சனம் வைத்திருந்தார் சீமான். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான பதிலடி கொடுக்கிறாகள். இது குறித்து பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..! சீமானே சுயநினைவை இழந்து இத்தனை நாள் எங்கே கிடந்தீர்கள்? வரதட்சணை கொடுமையால் […]

ஜெயலலிதாவுக்கு அடுத்த வாரிசு வந்தாச்சு.. எம்.ஜி.ஆரையும் டேமேஜ் பண்றாங்கப்பா

ஜெயலலிதாவின் மகள் என்று அவ்வப்போது சிலர் மீடியாவுக்குத் தலை காட்டி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் இப்போது கேரளத்தில் இருந்து வந்திருக்கிறார் சுனிதா. இவர் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்தவர் என்று உச்சநீதிமன்றம் வரையில் போயிருப்பதால், இந்த விவகாரம் செம ஹாட்டாக போய்க்கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுனிதா, தன்னை ஜெயலலிக்தாவின் மகள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா 1980களில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு […]

அண்ணாமலை புதுக் கட்சி…? நரேந்திரமோடிக்கு ஓய்வு…? பாஜகவில் பரபர மாற்றங்கள்

பா.ஜ.க.வில் பல்வேறு மாற்றங்கள் திடுதிப்பென்று நடந்துவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியை 75 வயதில் ஓய்வு பெற வைக்கும் முயற்சிகள் நடக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் அண்ணாமலை புதுக் கட்சி தொடங்கும் வியூகத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் சமீபத்தில், ‘75 வயது ஆனதும் மோடி ஓய்வு பெற்று விடவேண்டும். பின்னால் வருபவர்களுக்கு வழி விட வேண்டும்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். பாஜகவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் […]

அன்புமணி கைது செய்யப்படுவாரா…? சட்ட நடவடிக்கைக்கு ராமதாஸ் ரெடி

பா.ம.க.வில் அப்பா – மகன் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்குப் போயிருக்கிறது. இந்நிலையில், வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார். சமீபத்தில் அன்புமணி வந்து போனதை […]