News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கிடப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதா! திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக அரசால் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், அதன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை  நாடிய தமிழக அரசு, ஆளுநர் தமிழக […]

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ரூ.1,999.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தற்போது ரூ.57 குறைந்து ரூ.1,942க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.   கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது பொது மக்கள் மற்றும் ஓட்டல் […]

அதிவிரைவு ரெயிலில் திடீர் தீவிபத்து! 19 பேர் காயம்!

உத்தரபிரதேசத்தில் டெல்லி – சஹர்சா வைசாலி அதிவிரைவு ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 19 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் எட்டவா அருகே சென்று கொண்டிருந்த டெல்லி – சஹர்சா வைசா அதிவிரைவு ரெயிலின் எஸ்.6 பெட்டியில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் திடீரென்று புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த ரெயில் ரெயில் மெயின்பூரி சந்திப்புக்கு முன்பாக […]

நாளை உருவாகும் புயல்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பதிகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.   இதற்கிடையில் காற்றழுத்த […]

மண்டல மகர விளக்குபூஜை: சபரிமலையில் இன்று நடை திறப்பு!

மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்களில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு புஜையை முன்னிட்டு இன்று  மாலை 5 மணியளவில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு […]

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையும் விஜயசாந்தி! பா.ஜ.க. மீது அதிருப்தி!

தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.   […]

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் அமைச்சர் உதயநிதி!

சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாகி பேசுவதிலும், நியாயத்திற்கு குரல் கொடுக்கும் நான், சட்ட ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வேன் என்று பேசி தமிழக இளைஞர்களால் அதிகளவு கவரப்பட்டு வருகிறார். அவரின் எளிமையான தோற்றமும், துணிச்சலான செயல்பாடுகளும் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.   […]

300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 36 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   ஜம்மு  காஷ்மீர் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கிருந்த 300 அடி பள்ளத்தில் பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்தது.   இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 36 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் […]

விடுதிக்குள் நுழைந்த கார்! பெண் உரிமையாளர் பரிதாப பலி!

பெண்கள் தங்கும் விடுதிக்குள் திடீரென்று கார் நுழைந்து ஏற்பட்ட விபத்தில் விடுதி உரிமையாளர் பலியான சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.   கோவா வஹடார் பகுதியில் பெண்கள்  தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 11ம் தேதி இரவு 57 வயதான ரெமிடியா மேரி விடுதி வளாகத்தில் ரிஷப்சன் முன்பு நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். இவர் விடுதியின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது.   அப்போது அங்கு வேகமாக பாய்ந்து வந்த கார், விடுதி உரிமையாளரான ரெடிமியா […]

இரட்டை போர்க்குற்றம் செய்யும் ஹமாஸ் பயங்கரவாதிகள்! இஸ்ரேல் குற்றச்சாட்டு!

காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போருக்கு அஞ்சி 15 லட்சம் புலம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் […]