கூட்டணி நஹி… பணம் நஹி… மா.செ. மாற்றம் நஹி…! குழப்பத்தில் முடிந்த எடப்பாடி பழனிசாமி மீட்டிங்

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. சில மாவட்டச் செயலாளர்களை தேர்தல் நேரத்தில் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இன்று கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘’நமது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பேசித் தீர்த்துகொண்டு ஒற்றுமையாக லோக்சபா தேர்தல் பணிகளை கவனியுங்கள். யாரையெல்லாம் வேட்பாளராக நிறுத்தலாம் என்று பெயர் பட்டியலை இப்போதே எனக்கு […]
அடுத்து மசூதிக்குள் நுழைகிறாரா அண்ணாமலை..? சூடு பிடிக்கும் நெற்றியில் திருநீறுடன் மாதா சிலைக்கு மாலை விவகாரம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பி.பள்ளிப்பட்டு பகுதியில் தேவாலய சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க முன்வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதாவுக்கு அண்ணாமலை மாலை போடுவதை தடுத்த கிருஸ்துவ இளைஞர்களுக்கும் சர்ச் வாசலிலே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை உள்ளே செல்லக்கூடாது என்று எகிறிய இளைஞர்களிடம், ‘அடுத்து நான் பத்தாயிரம் பேரோடு வந்து மாலை போட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டு மிரட்டியதும் போலீஸ் வந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் […]
தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் ஆன கதையை எடப்பாடி பேசியதற்கு இதுதான் காரணமா..? பாயத் தயாராகும் பா.ஜ.க.

எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர் அத்தனை பேரும், அவர் சசிகலா காலில் விழுந்து தவழ்ந்து சென்று பதவி வாங்கியவர்கள் என்று கிண்டல் செய்வது வழக்கம். இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘’நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. உங்களை போலத்தான் நானும் அமர்ந்து இருந்தேன். ஆனால் அப்படியே […]
ஸ்டாலினை விமர்சனம் செய்த காளியப்பன் கைது… கொந்தளிக்கும் நாம் தமிழர் இயக்கம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த குற்றச்சாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் காளியப்பன் கைது செய்யப்பட்டிருப்பது சீமான் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், ’முதல்வரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஒப்பாரி வைத்த கன்னட அமைப்பினரை கண்டிக்க கூட வக்கற்ற திமுக! உதயநிதியின் தலைக்கு 10 கோடி விதித்த வடநாட்டு சாமியாரை […]
சாலி கிராமத்தில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய திரையுலகம்!

கேப்டன் மறைவைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலகத்தில் கலந்து கொள்ள முடியாத திரைப்பிரபலங்கள் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் 28ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் தமிழக அரசின் […]
தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்த் படங்கள்… தியேட்டரை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்

நீண்ட காலமாக உடல் நலமின்றி விஜயகாந்த் மரணம் அடைந்திருந்தார் என்றாலும், அவருக்கு சென்னையில் குவிந்த கூட்டமும் தினம் தினம் அவரது சமாதிக்கு வந்து சேரும் மக்கள் எண்ணிக்கையும் இன்னமும் குறையவே இல்லை. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த பழைய படங்களை தூசு தட்டி திரையில் வெளியிடும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. இப்போதே தென் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். […]
லூலு மாலுக்கு போகிறதா கோயம்பேடு நிலம்..? சீமான் அதிரடி குற்றச்சாட்டு

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த போதும், பரந்தூர் விமான நிலையத்துக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் எதிராக பேட்டி கொடுத்தார். சீமான் பேசுகையில், ‘’400 கோடி ரூபாயில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அதற்காக போராட்டம் நடத்தினோமா? மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நிறைய விமானங்கள் வருகிறது. அதனால் 5000 ஏக்கர் கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெருவில் […]
ராமர் கோயில் திறப்புவிழாவில் ரஜினி, இளையராஜாவுடன் துர்கா ஸ்டாலின்..?

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறுகிறது. இங்கு ஸ்ரீராமர் தவிர அன்னபூரணி, அனுமன், மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்ற கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. இங்குள்ள தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் மற்றும் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் […]
அமெரிக்காவுக்கு தப்பியோடி டிமிக்கி கொடுத்த நிதி மோசடி கிரிமினல் … தட்டித் தூக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த உமா மகேஸ்வரி மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த 289 ஊழியர்களுக்கு கன்ஸ்யூமர் டியூரபில் லோன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் 98.47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ராமநாதன், வள்ளியம்மாள், ராம்மோகன், ரமேஷ், லட்சுமணன், நல்லகண்ணு ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதியறிக்கை கூடுதல் சிறப்பு பெருநகர குற்றவியல் சிசிபி வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக மேற்கண்ட […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம் (ஜனவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அன்று நண்பகல் 12.20 மணியளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய […]

