News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விஜயகாந்த் மகன், நேரு மகன், சிதம்பரம் மகனுக்கு இவ்வளவு சொத்துக்களா..?

தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களையும் தெரிவிக்க வேண்டும். அதன்படி வெளியாகியிருக்கும் சொத்துப் பட்டியல் சாதாரண மக்களை நிலைகுலைய வைக்கிறது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரின் சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன சிவகங்கையில் போட்டியிடும் பி.சிதம்பரத்தின் மகன் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திற்கு 127 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. […]

ஓ.பி.எஸ்.க்கு இப்படி ஒரு சோதனையா..? எதிர்த்து நிற்கும் ஓ.பன்னீர்செல்வம்

மூன்று முறை முதல்வர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், மிகவும் பணிவானவர் என்றெல்லாம் பெயர் வாங்கிய ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் செல்லாக்காசாக மாறிவருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அ.தி.மு.க.வை மீட்பதற்கு நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி அடையவில்லை. சின்னம், வேட்டி, கொடி என எதையுமே பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தடை போட்டுவிட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட சில தொகுதிகள் வாங்கிவிடலாம் என்று நினைத்தார். வாசனுக்கு 3, தினகரனுக்கு 2 என்று கொடுத்த பா.ஜ.க. பன்னீர்க்கு ஒரே […]

செளமியா அன்புமணி வாரிசு அரசியல் கிடையாதாம்… அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பு

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ.க. போராடுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அண்ணாமலை வரையிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில், செளமியா அன்புமணி தேர்தலில் நிற்பது வாரிசு அரசியல் இல்லை என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அண்ணாமலை. தர்மபுரிக்கு வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென பா.ம.க. சார்பில் செளமியா அன்புமணி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, அவர் ஜெயித்து அமைச்சராகப் போகிறார் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்த வாரிசு அரசியல் குறித்து […]

பாத்திமாவுக்கு இல்லை… வீரப்பன் மகளுக்கு சீட்டு… சீமான் கட்சிக்குள் களேபரம்

மக்களவைத் தேர்தல் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜக.வில் இருந்து வந்து சேர்ந்திருக்கும் வீரப்பன் மகள் வித்யா ராணியை அறிமுகம் செய்திருப்பது சீமான் தம்பிகளை சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். பாத்திமா பர்ஹானா தான் மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பல் மருத்துவர் கார்த்திகேயனை அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதி நா.த.க வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணியை அறிமுகம் […]

கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி.. மேடையில் அழுத துரை வைகோ

’உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், செத்தாலும் எங்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என்று மேடையில் கண்கள் கலங்கி சென்டிமென்ட் ஆக துரை வைகோ பேசியதற்கு கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சி கொடுத்த அழுத்தமே காரணம் என்றே கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகவே திருச்சியில் துரை வைகோவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 24ம் […]

அண்ணாமலை தோற்றுப்போனவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகிறாரா தமிழிசை..?

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு எனக்கு விருப்பமே இல்லை, ஆனாலும் என்னை நிறுத்தியிருக்கிறார்கள் என்று கூறிவரும் அண்ணாமலைக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது என்று பா.ஜ.க.வின் சீனியர்கள் குஷியாகி இருக்கிறார்கள். தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி அடைந்துவிட்டது என்று தொடர்ந்து பேசி வருகிறார் அண்ணாமலை. இதனை உண்மை என்று நிரூபித்துக் காட்டும் வகையிலே அவரை கோவையில் வேட்பாளராக பா.ஜ.க. தலைமை நிறுத்தியிருக்கிறது. இந்த தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் இல்லை என்றாலும் நிற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டார். கோவை […]

40 வேட்பாளர்களுக்கும் ஆக்டிங், சூட்டிங், மேடையேற்றம்… சீமான் தனி ரூட்டு

வெல்லப்போறான் விவசாயி சின்னத்தை இழந்துவிட்டாலும் எப்போதும் போல் தனிக்காட்டு ராஜாவாக களம் இறங்குகிறார் சீமான். இன்று அவரது 40 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் மேடையில் ஏற்றி அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக ஒரு நாள் முழுக்க வேட்பாளர்களுக்கு சூட்டிங் வைத்து, அவர்களுக்கு பேசுவதற்கு சொல்லிக்கொடுத்து முழு நேர இயக்குனராக மாறிவிட்டார் நாம் தமிழர் சீமான். ஒவ்வொரு வேட்பாளர்களும் திடீர் நடிகர்களாக மாறி எப்படி பேசுவது, எப்படி தேர்தல் பரப்புரை செய்வது என்று நடித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் […]

ஆளுநர் மாளிகையில் பரப்புரை… கிருஷ்ணாவுக்கு ஆதரவு… ஸ்டாலின் அதகள தேர்தல்

அமைச்சர் பொன்முடியை அமைச்சராக்கியே தீருவேன் என்று உச்ச நீதிமன்றம் வரையிலும் போய் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதோடு கவர்னரிடமே, ‘தேர்தல் பரப்புரைக்குக் கிளம்புகிறேன்’ என்று சொன்னதும், ‘ஆல் த பெஸ்ட்’ என்று வாழ்த்துரையும் வாங்கியிருக்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் இதனை பேசிய ஸ்டாலின், ‘நான் இங்கு தேர்தல் பரப்புரையைத் தொடங்கவில்லை, ஆளுநர் மாளிகையிலே தொடங்கிவிட்டேன்’ என்று தெறிக்க விட்டுள்ளார். அதோடு, பெரியார், அல்லா குறித்து பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சையில், கிருஷ்ணாவுக்கு ஆதரவாக […]

மானஸ்தன் ராமதாஸ் குடும்பத்திலிருந்து செளமியாவும் வந்தாச்சு..! மோடியின் குடும்ப கட்சி அரசியலுக்கு பதிலடி

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்செய்யப்பட்டு, அவரது மருமகள் செளமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில்வன்னியர்கள் கடும் ஆவேசத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிஅமைந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென பா.ஜ.க.வுடன் சேர்ந்து நிர்வாகிகளுக்குபெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் ராமதாஸ். பா.ம.க.வுக்கு 10 தொகுதிக பாஜகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளுக்கானவேட்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். அதன்படி, திண்டுக்கல், அரக்கோணம், ஆரணி,கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், விழுப்பும் ஆகிய தொகுதிகளுக்குவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். […]

பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு தேதி குறித்த தங்கர் பச்சான்…  அன்புமணி கனவை உடைச்சிட்டாரே

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கமே பா.ம.க. இருக்கும் என்று எண்ணப்பட்டு வந்த நிலையில், பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டது. இந்த கூட்டணியில் அமைச்சராகும் ஆசையில் அன்புமணி இருக்கையில், வில்லங்கமாகப் பேசியிருக்கிறார் வேட்பாளரும் சினிமா பிரபலமுமான தங்கர்பச்சான் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி அங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி,   திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா அரக்கோணம் – வழக்கறிஞர் […]