இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செங்கோட்டையா..? விஜய் ரசிகர்களுக்கு குஷி

விஜய் கட்சிக்கு செங்கோட்டையன் வந்தே சேர்ந்துவிட்டார். செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள் சிகப்பு துண்டை அணிவித்து வரவேற்றார். விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி உறுப்பினர் அட்டையை தனது கை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது. அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. […]
விஜய் கட்சியில் செங்கோட்டையன்… என்ன பொறுப்பு தெரியுமா..?

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று இத்தனை காலமும் காத்திருந்த ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார். அந்த கட்சியில் செங்கோட்டையன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் கட்சியில் சேர்வது உறுதியாகிவிட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனும் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். பாஜக […]
ஓபிஎஸ் புதுக் கட்சி… அதிமுக ஓட்டுக்கு ஆபத்து..?

தர்மயுத்தம் நடத்திய பிறகு தள்ளாட ஆரம்பித்த ஓபிஎஸ் இன்னமும் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சிக் கரை வேட்டி கட்டமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி உதயமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உரிமை மீட்பு குழு இன்று முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் […]
சீமானுக்கு என்னாச்சு…? தேர்தல் கமிஷன் நடைமுறை தெரியாதா?

எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கொடுக்கும் சீமான் தேர்தல் கமிஷன் நடைமுறையைப் புரிந்துகொள்ளமால், செய்தியாளர்களை வாடா, போடா என்று பேசியிருப்பது மீடியாக்களை அதிர வைத்திருக்கிறது. மனநிலை தடுமாறியவர் போன்று சீமான் பேசியிருப்பதாக விமர்சனம் வருகிறது. புதுவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் கலைஞர் டிவி செய்தியாளர் ராஜிவ் எழுப்பிய கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் அவர் மீது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பாய்ந்துள்ளார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக […]
வீட்டுக்கு ஒரு பைக் இலவசம்…? விஜய் தேர்தல் அறிக்கை முன்னோட்டம்.

இலவசங்களே இல்லாத தேர்தல் அறிக்கையே எங்கள் நோக்கம் என்ற விஜய் இப்போது எல்லோருக்கும் வீடு, கல்வி, பைக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசியிருக்கும் நடிகர் விஜய், ஒர் எலைட் அரசியல்வாதி போன்று வீட்டுக்கு ஒரு பைக் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. வீட்டுக்கு ஒரு பைக் தரப்போகிறார் விஜய் என்று ரசிகர்கள் குஷியாகிறார்கள். இதுகுறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’மீண்டும் மீண்டும் சினிமா […]
மீண்டும் அண்ணாமலை…? ஆத்திரத்தில் நயினார் அதிர்ச்சியில் எடப்பாடி

கோவைக்கு பிரதமர் வந்துவிட்டு சென்ற பிறகு அண்ணாமலை இரண்டு முறை பிரஸ்மீட் கொடுத்துவிட்டார். நயினார் தலைவராக வந்தபிறகு அமைதியாக இருந்த அண்ணாமலை மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடங்கியிருப்பது நயினார் மற்றும் எடப்பாடிக்கு எரிச்சலைக் கொண்டுவந்திருக்கிறது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்று திருமண விழாவில் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துக்கொண்ட விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. அமமுகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை […]
அய்யா பாமக என்கிற ஆயா பாமக உதயம்.? அன்புமணி வெறித்தனம்

பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்களை நடத்தி தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.பாஜக மற்றும் தேர்தல் கமிஷன் ஆதரவுடன் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பது உறுதி என்பது டாக்டர் ராமதாஸ்க்குத் தெரிந்துவிட்டது. அதனால், புதிய கட்சி […]
தொழிலாளர்களுக்கு மோடி நெருக்கடி. 12 மணி நேர வேலை சட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்திருக்கும் புதிய சட்டம் வாரத்திற்கு 48 மணி நேரம் தான் சொல்கிறது, ஆனால் ஒரு நாளில் 12 மணி வேலை செய்யலாம் என்று கூறியிருப்பதால் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து மோடி, ‘’இன்று, நமது அரசாங்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை […]
விஜய்க்கு காங்கிரஸ் ஆப்ஷன் காலி… காஞ்சிபுரத்தில் திக் திக்

விஜய்யுடன் ராகுல்காந்தி பேசிவிட்டார், மாஸ் கூட்டணி உறுதி என்று தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கூறிவந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவையே காங்கிரஸ் அமைத்துவிட்டது. இந்நிலையில் நாளை காஞ்சிபுரம் கூட்டம் நடக்குமா, நடந்தால் என்னாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘’தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் ‘இந்தியா கூட்டணி’ யின் […]
விஜய்க்கு சோதனை மேல் சோதனை… அடுத்து எப்போ வரப்போகிறார்..?

விறுவிறுப்பாக சனிக்கிழமை தோறும் நடந்துவந்த விஜய் தேர்தல் பிரசாரம் கரூர் சம்பவத்தை அடுத்து இழுத்து மூடப்பட்டுவிட்டது. டிசம்பர் மாதமாவது தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஆசைப்பட்ட விஜய்க்கு மீண்டும் காவல் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வரும் டிசம்பர் 4ம் […]

