உதயநிதி இன்ஸ்டாவில் கில்மா ரிபோஸ்ட்… வைரலாகும் பெண் யார்..?

சனிக்கிழமை தோறும் ரவுடி டைம் போஸ்ட் செய்துவந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் நேற்று இன்ஸ்டாவில் ஒரு பெண்ணின் கில்மா போட்டோக்களை ரிபோஸ்ட் செய்தது, செம வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டை தலைகுனியாமல் காப்பாற்றுவேன் என்று வீரசபதம் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணின் சில கில்மா புகைப்படங்களை ரிபோஸ்ட் செய்து, அவற்றை அவசரம் அவசரமாக அழித்தும் இருக்கிறார். அதற்குள் அந்த போஸ்ட் எக்கச்சக்கமாக பரவி வருகிறது. விஜய் விவகாரம் பற்றி எக்கச்சக்கமாக உதயநிதி டீம் விமர்சனம் செய்கிறது. அதாவது விஜய் […]
ஸ்டாலினுக்கு எக்கச்சக்க நெருக்கடி… வில்லங்கமாகும் டிஜிபி நியமனம்

கரூர் விவகாரம் தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலும் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெத்தியடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் செய்வதற்கு இந்தியப் பணியாளர் தேர்வாணையம் மூன்று பேர் கொண்ட பட்டியல் அனுப்பியபிறகும், நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதால் ஸ்டாலினுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. டிஜிபி பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த டிஜிபி அதிகாரிகள் பட்டியலை 3 மாதத்திற்கு முன்னதாகவே யு பி எஸ் சி என்று அழைக்கப்படும் இந்தியப் […]
டிரம்ப் இந்தியாவை மிரட்டுகிறாரா..? எண்ணெய் விவகாரத்தில் மோடி சைலன்ட்

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கை விடுமா என்பது பெரும் சர்ச்சையாகிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடங்கி எண்ணெய் கொள்முதல் வரையிலும் இந்தியா விவகாரத்தை முதலில் அறிவிப்பவராக அமெரிக்காவின் டிரம்ப் இருக்கிறார். அப்படியென்றால் அமெரிக்காதான் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஆட்சி நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 70 ஆண்டுகளாக வலுவான மற்றும் நிலையான உறவுகளைப் பராமரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு […]
விஜய் ரசிகர்களுக்கு பிளாக் தீபாவளி… கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் அளிக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேரில் செல்வதற்கு எக்கச்சக்க இடையூறுகள் இருக்கும் காரணத்தால் நேற்றைய தினம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 பேரின் குடும்ப உறுப்பனர்களின் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா 20 லட்சம் ரூபாய், வரவு வைக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி […]
ஆணவப் படுகொலைக்கு ஆணையம்… சீட்டிங் வேலையா ஸ்டாலின்..?

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைப்பு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பது பெரும் வரவேற்பு பெற்றாலும், கடும் சர்ச்சையும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டாலின், ‘’அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை அரசு அமைக்கும்…’’ என்று கூறியிருக்கிறார். ஆட்சி […]
உருட்டுக்கடையுடன் மோதும் திருட்டுக்கடை… வைரலாகும் அல்வா

சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி திடீரென உருட்டுக்கடை அல்வா என்று ஒரு பாக்கெட் தூக்கிக் காட்டினார். திமுகவின் உருட்டுக்கடை அல்வா குறித்து அவர், ‘’திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’ என்றபடி […]
அன்புமணி மாடு மேய்க்கவும் லாயக்கில்லை..? ராமதாஸ் காட்டம்

சமீபத்தில் உடல்நலம் குன்றி ஐ.சி.யு.வில் இருந்ததால் அய்யா ராமதாஸை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தார். அதோடு ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் விமர்சித்தார். இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக […]
திருமாவளவன் மீது என்ன நடவடிக்கை..? பார் கவுன்சில் அதிரடி

திருமாவளவன் காருக்கு முன் வேண்டுமென்றே வம்பு செய்தார் என்று ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாய்ந்த விவகாரம் வில்லங்கமாகிவருகிறது. பார் கவுன்சில் விசாரணைக் குழு அமைத்திருக்கும் நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், திருமாவளவன் வருகை தந்த நேரத்தில் ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக அவர் பிரச்னை செய்தார். […]
நேற்று கரூர் கருப்புப் பட்டை இன்று கிட்னி திருட்டு… அதிமுக களேபரம்

நேற்றைய தினம் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு கருப்புப்பட்டை அணிந்துவந்ததுடன் கரூர் விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். சட்டப்பேரவையில் நடந்தது குறித்து இபிஎஸ், ‘’நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் […]
விஜய் கூட்டணிக்குப் போகிறார் வைகோ… அரசியல் திடீர் திருப்பம்..?

கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி உருவாக்கி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர் வைகோ. அப்போது முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். இப்போது அதேபாணியில் விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொண்டு திமுகவை தோற்கடிக்கப் போகிறார் என்று மல்லை சத்யா குற்றம் சாட்டியிருக்கிறார். வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி திமுகவை உடைத்தவர் வைகோ. அவருக்கு மிகப்பெரும் ஆதரவும் இருந்தது. ஆனால், தவறான முடிவுகளாக எடுத்து அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என பல்வேறு கூட்டணிகளுக்குத் […]

