டாக்டர் ராமதாஸின் ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலுக்கு வந்தாச்சு… பிரதமர் மோடிக்கு பச்சோந்தி பாராட்டு

தேர்தலுக்குத் தேர்தல் இடம் மாற்றிக்கொள்வதில் டாக்டர் ராமதாஸ் ரொம்பவே கில்லாடி. இடம் மாறிய பிறகு கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பழைய கூட்டணியை விமர்சனம் செய்து புதிய கூட்டணிக்கு ஜால்ரா போடுவார். முன்பு மோடிக்கு ஜீரோவுக்குக் கீழே மதிப்பெண் கொடுத்த ராமதாஸ் இப்போது பிரதமர் மோடி துரும்பு கூட தவறு செய்யவில்லை, பரிசுத்தமானவர் என்று சான்று கொடுத்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க. நிற்பது குறித்தும் இடஒதுக்கீடுக்கு மோடி எதிரானவர் என்பது குறித்தும் அவர் வாயைத் திறக்கவே இல்லை. […]
திருமாவளவனுக்கு வருமான வரித்துறை அச்சுறுத்தல்..! கொதிக்கும் விடுதலை சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் புறவழிச் சாலையில் நடேசன் நகரில் ஒரு இல்லத்தில் தங்கி தேர்தல் பிரசார பணிகளைக் கவனித்துவருகிறார். பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்துவருகிறார். வெள்ளத்தின் போது தமிழகத்தை எட்டிப் பார்க்காத மோடி, இப்போது எதற்கு வருகிறார் என்று ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு […]
பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் இந்துக்கள் பணத்தை சுருட்டிட்டாரா..? ஆட்டம் காணும் மயிலாப்பூர் நிதி நிறுவனம்

கண்ட கண்ட நிதி நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று எத்தனை எடுத்துச்சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு பின்னர் லபோதிபோவென வயிற்றில் அடித்துக்கொள்கிறார்கள். அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது, தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவன பணத்தை தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் சுருட்டிவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு […]
அமைச்சர் துரைமுருகன் மகனுக்கு மீண்டும் சிக்கல்… வேலூர் தேர்தல் தள்ளிப் போகுமா..?

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வினரே அதிருப்தி அடைந்திருக்கும் ஒரு வேட்பாளர் என்றால், அவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மட்டும்தான். அப்பாவின் செல்வாக்கில் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டு மக்களை கண்டுகொள்ளவே செய்யாதவர். கடந்த தேர்தலில் இவரது வேலூர் தொகுதியில் எக்கச்சக்கமாக பணம் புரண்டோடியதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு தனியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் வீட்டில் […]
தி.மு.க.வின் சிற்றரசு, இயக்குனர் அமீர் வீடுகளில் ரெய்டு.! உதயநிதிக்கு குறி வைக்கிறதா அமலாக்கத்துறை..?

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இது பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய […]
பணீந்தர ரெட்டிக்கு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பணத்தில் ஸ்பெஷல் கவனிப்பு..? கிடுகிடு குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முறைகேடு இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த கோயில் பணமான 6,648 ரூபாயை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் கொள்ளை அடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5.2.2020 அன்று தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்தர ரெட்டி பார்வையிட சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்திருக்கிறார். அவருக்கு நாடியம்மன் கோவில் பணம் 6,648 ரூபாயை செலவு செய்ததாக நாடியம்மன் கோயில் செயல் அலுவலர் […]
இன்ஸ்டாகிராமுக்கு பா.ஜ.க. தடை..? சீமான் நெத்தியடி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் நாளுக்கு நாள் மோதல் வலுப்பெற்று வருகிறது. மூன்றாவது இடம் யாருக்கு என்பதற்கான மோதல் இதுவென சொல்லப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் இன்ஸ்டாகிராம் பற்றி பேசி பரபரப்பு கிளப்பியிருக்கிறார் சீமான். சீமான் செய்தியாளர்களிடம், ‘இப்போது சுமார் 3 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை […]
நெல்லையில் தேர்தல் நிறுத்தம்..? நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை ஆப்பு?

நெல்லை தொகுதியை சரத்குமாருக்குத் தரவேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் கணக்காக இருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் கனவில் இருந்த நயினார் நாகேந்திரன் இதனை முறியடிக்கும் வேலையில் இறங்கினார். எனவே, கட்சி அறிவிக்கும் முன்னரே தானே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியே விட்டார் நயினார் நாகேந்திரன். ‘அண்ணா, இன்னும் வேட்பாளர் பரிசீலனை நடக்கவே இல்லை, அதற்குள் நீங்களே கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாமா?’ என்று அண்ணாமலை கேள்வி கேட்ட நேரத்தில், ‘நீங்க எதுக்காக இப்படி கேட்குறீங்கன்னு தெரியும், நான் இந்த தொகுதியை […]
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

விக்கிரவாடிண் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதி பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. அமைச்சர் பொன்முடியின் நெருங்கிய நண்பரான புகழேந்திக்கு வயது 71. தி.மு.க.வின் 1973 காலகட்டத்திலேயே கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி அதன் பின்னர 1980 முதல் 1986 வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக செயல்பட்டார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் […]
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்தை பிடித்துள்ளார். உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்டு அர்னால்டு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2வது இடத்தில் ஜெப் பசோஸ் உள்ளார். புளூம்பெர்க் பில்லினியர்கள் குறியீட்டின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ஜூகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 58.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு […]

