News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ரூ.2 ஆயிரம் நிவாரணம் போதாது! அண்ணாமலை காட்டம்!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் புகுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.   இதைத்தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு, மாடு, பயிர்கள் என சேதம் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட […]

பணய கைதிகள் விடுதலை ; இஸ்ரேளுக்கு ஹமாஸ் அமைப்பு நிபந்தனை

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. மேலும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லபட்ட பணய கைதிகளின்  உடல்களும் மீட்கப்பட்டன .  ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் […]

சாத்தனூர் அணை திறப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் உயிரிழப்பு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களின் பயிர்கள் சேதம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

வெள்ளப்பகுதிகளில் ஆஜரான அண்ணாமலை… காணாமல் போன விஜய்

விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக மாநாடு நடத்திக் காட்டிய நடிகர் விஜய், தற்போது விழுப்புரம் மாவட்டம் தண்ணீருக்குள் மூழ்கி தடுமாறும் நேரத்தில் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடப்பது அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் நிவாரணத்தில் ஈடுபட்டு நேரத்தில் விஜய் மட்டும் அமைதியாக இருக்கலாமா என்று அவரது கட்சியினரே சங்கடப்படுகிறார்கள். நான்கு மாவட்டங்களை உலுக்கியெடுத்த புயலுக்கு நடிகர் விஜய், ‘’திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் […]

கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே மோதல் !

கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர்.போட்டியின்போது நடுவரின் சர்ச்சையான தீர்ப்பு  வழங்கியதாக கூறப்படுகிறது .   இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் மைதானத்தில் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.    இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை […]

பெஞ்சல் புயல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம்!

பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள்யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும்வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் மூத்த […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும் வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் […]

ஹெச்.ராஜாவுக்கு செம ஆப்பு வைத்த நீதிமன்றம்… 6 மாதம் சிறை தண்டனை

கோர்ட்டாவது …யிராவது என்று நீதிமன்றத்தைக் கேவலமாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்கு இன்று நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுத்து அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புகார்கள் […]

அண்ணாமலை வருகை, ஆர்.எஸ்.எஸ். கூட்டம். சூடு பிடிக்கும் பா.ஜ.க. தேர்தல் வியூகம்

Lலண்டனில் படிப்பு முடித்துவிட்டு அண்ணாமலை திரும்பிவருகிறார் எனும் நிலையில் அவருக்கு சரத்குமார் தொடங்கி பழைய நிர்வாகிகள் அனைவரும் வருக வருக என்று வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். கடந்த மாதமே படிப்பு முடிந்துவிட்டாலும் இன்னமும் தலை காட்டாமல் பதுங்கியிருக்கிறார் அண்ணாமலை. இந்த நிலையில் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் இன்று  1500 இடங்களில் ரகசியக் கூட்டம் நடத்துவதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதாவது, இங்கு பேசப்படும் விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக் […]