குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்! பரபரப்பான டி.பி.ஐ. வளாகம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து […]
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் […]
ஆவின் பால் முகவர்கள் குமுறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. […]
தேசிய மருத்துவ ஆணையை நிறுத்துங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. […]
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் […]
இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்! வீடியோ வைரல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் […]
ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ள பா.ஜ.க. தலைமை! டி.டி.வி. அடுத்த மூவ் என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் […]
தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]
7வது நாளாக தொடரும் போராட்டம்! இடைநிலை ஆசிரியர்கள் பிடிவாதம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]
காந்தி ஜெயந்தி: முதலமைச்சர், ஆளுநர் மரியாதை மலர் தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

