News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து உரையாற்றினார். இன்று (அக்.9) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு பஞ்சாப் முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் […]

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி! ம.பி. நவ.17, தெலுங்கானா நவ.30, ராஜஸ்தான் நவ.23

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது. மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் […]

கனவு இல்லத்தை பெறும் பயனாளர்களுக்கு வாழ்த்துக்கள்! சேப்பாக்கத்தில் உதயநிதி பேச்சு!

சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.   சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 1979ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டுகளில் 392 வீடுகள் கட்டப்பட்டன.   இந்த வீடுகள் அனைத்து பழுதடைந்த […]

5 மாநில தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் 12 மணிக்கு அறிவிப்பு!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.   தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய […]

பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]

இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.   ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது.   இப்போட்டித் தொடரில் இந்தியா, […]

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள்  ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள  சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது

வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,  வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]

குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்! பரபரப்பான டி.பி.ஐ. வளாகம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து […]

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு  நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் […]