News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரகாஷ்ராஜ், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு ஆவேசம் காட்டிவரும் சூழலில், சென்னையில் நடந்த போராட்டத்தில் ஆன்ட்ரியா களம் இறங்கியிருக்கிறார்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய வெற்றிமாறன், ‘’இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது. நீட் தேர்வையே தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக மாற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்…’’ என்றார்.

நடிகை ஆன்ட்ரியா, ‘’இது தான் என் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக நான் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். மாணவர்கள் போராட்டம் எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது என்றாலும் நாம் இங்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை பகிர்ந்து கொள்கிறேன். “எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு அனைவருக்கும் விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்கிறதோ… அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்”. அறிவு அனைவருக்கும் விலையின்றி கிடைக்கவேண்டும். அறிவு என்பது நமது பிறப்புரிமை. மாணவர்களோடு எப்போதும் துணையாக நிற்பேன்…’’ என்று மகிழ்ச்சியுடன் போராட்டக் களத்தில் பேசினார்.

இதையடுத்து அமீர், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்திற்காக விஜய்யை சந்தித்தார் என்று கூறப்பட்ட தெருக்குரல் அறிவு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘’நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்று நான் தலைமைச் செயலகம் முன்பு போராடியபோது என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைதான் சந்தித்தேன். அவர், “நீட் தேர்வை ரத்து செய்வது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் முடியும். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இந்த போராட்டத்தில் இறங்கினீர்கள்” என்று அறிவுரை செய்து அனுப்பினார் என்று கூறியிருக்கிறார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பிரகாஷ்ராஜ் செயல் பரபரப்பாகியுள்ளது. அதாவது, திறந்தவெளி வாகனத்தில் நின்று கோஷம் போட்ட போராட்டக்காரார்களை போலீஸ் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தப்பித்துச் செல்ல நினைக்காமல் போராட்டத்தின் முன் பகுதிக்கு வந்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் போலீஸ் அமைதியாக பின் வாங்கியிருக்கிறது. இதுவே தலைமைப் பண்பு என்று பாராட்டுகிறார்கள்.

முதல்வராக இருக்கும் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை என்பதால் த்ரிஷா களத்திற்கு வருவார் என்று சொல்லப்படுகிறது.

பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link