News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

லியோ சிறப்புக்காட்சி விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட வேண்டும் […]

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வெளியுறவுத்துறை  அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படையினர் கைது செய்த 27 தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும் இதில் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.   தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.   அப்போது அவர் […]

சோனியா காந்தியை புத்தகம் கொடுத்த வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் […]

2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி!

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரத்தில் தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.வேப்பேரி காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் […]

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை!

  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.   சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.   சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து […]

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்த நிலையில் இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். அதன்படி சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். வணிக வரி முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் […]

அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]