News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

தலைமை தேர்தல் அதிகாரியுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி 68

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் […]

‘நீட் கையெழுத்து இயக்கம்”தொடக்கம்!

கழக இளைஞரணிச் செயலாளர் , மற்றும் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளோம். எப்படி, கடந்த ஆகஸ்ட் 20 […]

கொளத்தூர் தொகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானம்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள திரு.வி.க. நகர் பகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்தார். ரூ.3 கோடி செலவில் திரு.வி.க.நகர், பல்லவன் சாலை பகுதியில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்தாட்ட மைதானம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இம்மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாஸ் போட்டு தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து ஜவகர் நகர் பகுதியில் […]

உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை 2023 தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய (அக்.20) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு […]

தெலுங்கானாவில் பா.ஜ.க.வால் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? -ராகுல்காந்தி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர்.   சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.   அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் […]

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்! பக்தர்கள் அதிர்ச்சி!

  செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார்.   மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.   கடந்த 2019ம் ஆண்டு இந்திய […]

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]

ஓ.பி.எஸ். என் பக்கம் தான்! மனம் திறந்த சசிகலா!

ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, […]

அ.தி.மு.க.வின் 52 ஆண்டு கால சாதனைப்பயணம்! முழு விவரம் உள்ளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 52வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் தங்கள் மகிழ்ச்சியுடன் சேர்த்து இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். சற்று பின்னோக்கி பார்க்கும் போது அ.தி.மு.க. இந்த 52 ஆண்டு காலத்தை எப்படியெல்லாம் கடந்துவந்தது? அதன் ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு. தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் நடிகரும், […]