News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு! பா.ம.க. கருத்தரங்கம்!

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கட்சிகள், அமைப்புகள் என பலரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் […]

ரஜினியுடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த பெருமை! அமிதாப் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்துடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த மரியாதை என்று நடிகர் அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் இணையத்தில்  பதிவிட்டுள்ளது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நேற்று (அக்.25) நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து […]

பெட்ரோல் குண்டுவீச்சு! ஆளுநரை சந்தித்த சென்னை காவல் ஆணையர்!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் சந்தித்து பேசினார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிபரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கருக்காவினோத்திடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ.க. […]

நயன்தாராவின் அடுத்த திட்டம் இதுதான்! ரசிகர்கள் வரவேற்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பிசினஸ் இதுதான் என்று இணையத்தில் வெளியான செய்தியை பார்த்து ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். நடிப்பு, குடும்பம் என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவின் ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரது மார்க்கெட்டை […]

திருவல்லிக்கேணியில் பரபரப்பு! முதியவரை முட்டி வீசிய மாடு!

திருவல்லிக்கேணியில் முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயதான கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த மாடு ஒன்று கஸ்தூரி ரங்கனை முட்டி தூக்கிவீசியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கஸ்தூரி ரங்கனின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு […]

தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பசும்பொன் பயணம்!

வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை […]

அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]

பங்காரு அடிகளார் மறைவு! பிரதமர் இரங்கல் கடிதம்!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார். ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதிபராசக்தி […]

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா  முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]

என் இதயம் துடிக்கிறது- ‘தலைவர் 170’ ரஜினிகாந்த் வைரல் பதிவு!

தலைவர் 170 குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியை கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’ இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெகு […]