News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாநில உரிமையைக் காப்பதற்கு திமுக போராடும், வெல்லும் என்று தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக திமுக ஒரு சீன் கிரியேட் செய்தது. ஆனால், இப்போது நியாயமான தொகுதிவரையறைக்கு வரவேற்பு என்று பல்டி அடித்திருக்கிறது. அதாவது பாஜகவுக்கு திமுக இப்போதே ஆதரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

வரும் நவம்பர் 30 ஆம் தேதி மக்களவையும் டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையும் தனித்தனியாக கூட உள்ளது. இதையடுத்து டிசம்பர் 3ம் தேதி இரண்டு அவைகளும் ஒன்றாக அமரும் கூட்டு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா,  தொகுதி மறு வரையறை மசோதா,  பொது சிவில் சட்டம்,  ஒரே நாடு ஒரே தேர்தல் என எதை திட்டமிட்டு இந்த கூட்டத்தொடரை பாஜக அழைத்துள்ளது.

இந்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது. இப்போது திமுகவின் கோரிக்கை மூன்ருதான். அதாவது, தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்குப் பாதகமான வேறு எந்தவிதமான மாற்றங்களும் இருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டால், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதில் தவறில்லை என்று திமுக முடிவெடுத்திருக்கிறது.

இதையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று பாஜக தலையசைத்தாலே திமுக ஆதரவு கொடுத்துவிடும். எனவே, இத்தனை நாட்களும் திருட்டுத்தனமாக கூட்டணி வைத்த திமுக இப்போது நேரடியாகவே ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் சண்முகம், ’’தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.

தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

திமுக என்றாலே தடுமாற்றம்தானே. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link