Share via:
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது
பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும்
எரிபொருள் விலை உயர்த்தப்படுவது மூன்றாவது முறையாகும்.
இன்று முதல் அமலுக்கு
வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் விலை
லிட்டருக்கு 91 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வால் சென்னையில் பெட்ரோல்
ஒரு லிட்டர் ரூ.105.31க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.96.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான
சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மே 15ம் தேதி லிட்டருக்கு அதிரடியாக ரூ. 3 உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து
மே 19 அன்று 90 பைசா உயர்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக விலை ஏறியுள்ளது.
இதன் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட
5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும்
உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மோடியின் வெற்றியா என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால், ரஷ்யா இந்தியாவிற்கு சலுகை விலையில், ரூபாய் வாங்கிக்
கொண்டு, தேவையான அளவு கட்சா எண்ணெய் கால தாமதமின்றி தந்து வந்தது! ஈரான் சலுகை விலையில்,
கடனாக, பண்டமாற்று முறையில் கட்சா எண்ணெய் தாராளமாகத் தந்தது. அமெரிக்காவுக்குப் பயந்து
அதானி, அம்பானிக்கு ஆதரவாக மாறியதே இந்த பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள்.
இந்த விலையேற்றம் பற்றி பேசும் கம்யூனிஸ்ட்கள், ‘மோடி முதன்முறை
பிரதமராக வந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை
115 டாலர். அந்த மாதத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.41 ஆகவும்,
ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 55.49 ஆகவும் இருந்தது. ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில்
சடசடவென விலை குறைந்து பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலராக ஆனது.
இருப்பினும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கவேயில்லை.
மாறாக வரிகளை உயர்த்தி விலை குறையாமல் பார்த்துக்கொண்டது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும்,
டீசலுக்கும் மக்கள் தந்த பணத்தைக் கொண்டு தனது கஜானாவை நிரப்பிக்கொண்டது மோடி சர்க்கார்.
அப்படியாகப் பதினொரு ஆண்டுகளில் மக்களிடமிருந்து பாஜக அரசு எடுத்துக்கொண்ட தொகை எவ்வளவு
தெரியுமா? 40 லட்சம் கோடி ரூபாய்.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து பறித்த அரசுக்கு ஒரு லட்சம்
கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கிட மனமில்லை. ஏனெனில் இவர்கள் கார்ப்ப ரேட்டுகளின்
காவலர்கள், மக்களின் எதிரிகள்…’’ என்று கொதிக்கிறார்கள்.
நல்லா நடக்கிறது மோடியின் சாம்ராஜ்ஜியம்.
