News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

மு.க.அழகிரியின் மகள் கயல்விழி முதல்வர் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கயல்விழியை தடுத்து நிறுத்தும் பொறுப்பு கனிமொழியிடம் ஒப்படைக்கப்படிருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 தேர்தலில் எப்படியும் திமுகவில் இணைந்துவிட வேண்டும் என்று அழகிரி முயற்சி செய்தார். இதற்கு கடைசி நடவடிக்கையை கயல்விழி மேற்கொண்டார். ஆனாலும், சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இதையடுத்தே விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி கலந்துகொண்டார்.

அவர் விரைவில் விஜய் கட்சியில் இணைவார் என்று சொல்லப்படும் நிலையில், தலைமைச் செயலகம் வந்தார். அது குறித்து கேட்டதற்கு, ‘’நான் முதல்வரை சந்திக்க வரவில்லை. அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’’ என்று கூறினார்.

இந்த நிலையில் தனது சொந்த அண்ணனின் மகள் தவெகவில் இணையும் முடிவு  ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக விலகும் நிலையில், குடும்பமும் விலகுவது திமுகவினரை அதிர வைத்துள்ளது. எனவே, கனிமொழியிடம் சமாதானம் பேசி கயல்விழியை திமுகவுக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கு முயற்சி செய்துவரும் கனிமொழிக்கு இது நல்ல சான்ஸ். தனது ஆதரவாக கயல்விழியைக் கொண்டுவந்தால், உதயநிதிக்கு செக் வைக்க முடியும் என்று நம்புகிறார்.

என்ன நடக்கும் என்று வேடிக்கை பார்க்கலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link