News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாஜக அரசு ஓரவஞ்சனை காட்டியது. கல்வி நிதியை நிறுத்திவைத்தது. இப்போது புதிதாக விஜய் பதவி ஏற்ற நிலையிலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஓரவஞ்சனை தொடர்கிறது.

இதுகுறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’100 நாட்கள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை. தற்போது பெயர் மாற்றப்பட்டு செயல்பட்டுவரும் VB-G RAM G100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த 10% நிதியை 4% ஆக குறைத்துவிட்டது.

அதேநேரம் உத்திரபிரதேசத்திற்கு வழங்கி வந்த 9% நிதி 18% என இரட்டிப்பாக மாற்றியுள்ளது! 2026-27 ற்கான மொத்த மாநிலங்கள் உதவித்தொகை 96,000 கோடிகளில் வெறும் 4000 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது! தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆண்களும் பெண்களும் இந்த100 நாட்கள் வேலைதிட்ட உதவியை பெரிதும் நம்பியிருப்பதால் தவெக மாநில அரசு உடனடியாக குரல் எழுப்ப வேண்டும்’’ என்கிறார்.

விஜய் கட்சியினர் யாரும் வாய் திறக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி,, ‘’விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னரும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தமிழ்நாடு மீதான பாகுபாடான அணுகுமுறை தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், சமூகநீதி, தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகிய துறைகளில் முன்னுதாரணமாக விளங்கிய தமிழ்நாடு, தனது வெற்றிக்காகவே இன்று தண்டிக்கப்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் உரிமைகளை பறித்து, அவர்களின் நியாயமான பங்கை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாட்டின் உரிமைகள் மீதான இந்த அநீதியை நாங்கள் நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவோம். தமிழ்நாட்டின் நியாயமான பங்கிற்காகவும், கூட்டாட்சி உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக போராடும்..’’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விஜய் கட்சியினர் எதிர்த்து குரல் கொடுப்பார்களா..? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link