News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்கள் புதிய தவெக அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. யார், யாருக்கு எந்த பங்களா என்ற அறிவிப்பு பரபரப்பாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அரசு பங்களாவை காலி செய்துவிட்ட நிலையில், மற்ற திமுக அமைச்சர்களும் உடனடியாக காலி செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதன்படி சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்க்கு முல்லை பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்களுக்கு தாமிரபரணி பங்களா வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமல் அவர்களுக்கு NCB No.16 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி. ராஜ்குமார் அவர்களுக்கு பாமணி பங்களா வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ் அவர்களுக்கு சிருவாணி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் ஜெகதீஷ்வர் அவர்களுக்கு NCB No.19, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் அவர்களுக்கு NB No.37 ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி அவர்களுக்கு NB No.17 வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் வி. விஜய் தமிழன் பார்த்திபனுக்கு ரோஜா பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சி. ரமேஷ் அவர்களுக்கு NB No.15 வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதனுக்கு அன்பு பங்களா) ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் டாக்டர் குமார் அவர்களுக்கு “அன்பு” பங்களா வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. தென்னரசு அவர்களுக்கு பொதிகை பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமாருக்கு NCB No.18 வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வாஸ் அவர்களுக்கு NB No.24 (மனோரஞ்சிதம்), நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் என். மாரி வில்சனுக்கு NCB No.7A ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு மற்றும் கலால் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அவர்களுக்கு PB No.1, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் அவர்களுக்கு NCB No.1 வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு சாமந்தி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி அவர்களுக்கு NB No.7, வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களுக்கு NB No.36 வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் அவர்களுக்கு PB No.2 ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு விளக்கத்தின் படி, இந்த பங்களாக்கள் அனைத்தும் அமைச்சர்கள் தங்கள் பதவிக் காலத்தில் வாடகையில்லாமல் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் வீட்டு வாடகை உதவித்தொகை பெற தகுதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்களும் விஜய் பாணியில் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்களா என்பதும் உறுதிபடுத்தப்படவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link