News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

 

காவிரியில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தொகுதி வரையறைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியிருப்பது, காவிரி பிரச்சனையில் காங்கிரஸை காப்பாற்றும் நாடகம் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட திருமா, ப.சிதம்பரம், துரை வைகோ போன்ற பிரதிநிதிகள் உள்ளே என்ன நடந்தது என்று சொன்ன செய்திகளும், பேட்டிகளும் மட்டுமே வெளிவந்திருக்கிறது.

ஆனால், இந்த கூட்டத்தை கூட்டிய விஜய் என்ன பேசினார் என்ற தகவல் அல்லது கட்சியினரின் பேட்டி வரவில்லை. ஆனால், பட்டு வேஷ்ட்டி சட்டையில் வந்த விஜய்.. ரோட்டில் கொஞ்ச தூரம் நடந்த விஜய், சாலையோரம் நின்ற மக்களை பார்த்து கையசைத்த விஜய் என்று தான் செய்திகள் வருகிறது

உண்மையில், கர்நாடக பிரச்சினை என்பது பாஜக, காங்கிரஸ், த.வெ.க.வுக்கு தலைவலி தரும் சிக்கல். இதனால் காவேரி பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினால் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கோபம் அடைவார்கள். அதனாலே இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இதில் திமுக கலந்துகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துவதுதான் விஜய்யின் திட்டம்.

ஆனால், அது சக்சஸ் ஆகவில்லை என்பதுதான் பரிதாபம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link