News

Follow Us

இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருக்க வேண்டும். அதாவது 543 தொகுதிகளில் சரிபாதிக்கு மேல் ஒரு சீட் இருக்க வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமே 330 சிட்களில் மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்துக்கு பிறகு 1951ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டு அவற்றில் 364 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றது. இதையடுத்து

ராஜீவ் காந்தி தலைமையில் 517 தொகுதிகளில் போட்டியிட்டு காங்கிரஸ் 414 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது, நேரு, இந்திராவால் முடியாத ஒரு சாதனை எண் ஆகும்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து இறங்குமுகமே. எல்லா தேர்தல்களிலும் மாநிலக் கட்சிகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி காலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடமும் மாநிலத் தேர்தலில் குறைவாகவும் பெற்றுக்கொள்ளும் பழக்கம் இருந்தது. இப்போது எல்லா மாநிலக் கட்சிகளும் சுதாரித்துக்கொண்டன. ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்களே ஒதுக்குகின்றன.

ஆகவே, வேறு வழியின்றி இந்த தேர்தலில் 330 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் நடக்கும் இந்த தேர்தலில் குறைவாகப் போட்டியிடுவதன் தாக்கம் வெளிப்படையாகத்தெரிகிறது.

இந்த நிலையில், குறைவான தொகுதியில் போட்டியிட்டாலும் மாநிலக் கட்சிகள் உதவியுடன் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவது முக்கியம் அல்ல, குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு அதிக சீட் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

ராகுல் காந்திக்கு பிரதமர் யோகம் இருக்கிறதா என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துபோகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link