Share via:
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட
நடிகர் விஜய், திருச்சி கிழக்கை ராஜினாமா செய்துவிட்டார். தவெகவின் தேர்தல் வெற்றிக்குத்
திரைமறைவில் இருந்து மிக முக்கிய வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர்
ஜான் ஆரோக்கியசாமியை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க விஜய் முடிவு
செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனியார் நபர்கள்
தவெகவின் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி திமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள்
தமிழக ஆளுநரிடம் மனு அளித்துப் பரபரப்பைக் கிளப்பின. தவெக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தைப்
பெரிய அளவில் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் முயன்றன.
ஆகவே, ஜான் ஆரோக்கியசாமியை எம்.எல்.ஏ.வாக்கி அமைச்ச்சராக்கிவிட்டால்,
தன்னுடைய எதிர்கால அரசியல் நகர்வுகளுக்குப் பலம் சேர்க்கும் என முதல்வர் விஜய் முடிவு
செய்திருக்கிறார். அதோடு திருச்சி கிழக்கு தொகுதி என்பது விஜய் ஜெயித்த தொகுதி. அங்கே
மீண்டும் ஜெயிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு உண்டு. அதனால், தேர்தல் அரசியலின் அக்கு
வேர் ஆணிவேரை நன்கு அறிந்த ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்தினால் ஜெயிக்கலாம் என்று விஜய்
நினைக்கிறார்.
தமிழக அரசியல் புது ரூட்டில் பயணிக்கிறது.