News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

முக அழகிரியின் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நன்றாக குணம் அடைந்துவிட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அதன்பிறகும் அவர் பொதுவெளியில் வரவே இல்லை. இந்த நிலையில், அழகிரியின் மகன் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் விவகாரம் அதிர்ச்சி தருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மீது பணமோசடி வழக்கு உள்ளது. இதில் அமலாக்க இயக்குநரகம் 10 சொத்துகளை முடக்கியிருக்கிறது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய இரண்டாம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பாக சிறப்பு பொது வழக்கறிஞர் பி. சிதார்த்தன் ஆஜரானார்.

இந்த மேல் முறையீட்டாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியப்பிரமாணத்தில், அவரது தந்தை முக அழகிரி, “எனது மகன் தயாநிதி அறிவாற்றல் குறைபாடு அடைந்து பகுதி ஊனமுற்ற நிலையில் உள்ளார். அதனால் மருத்துவ ரீதியாக சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய இயலாத நிலையில் இயற்கை பாதுகாவலராக நான் இதை தாக்கல் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி குறித்து விளக்கமளித்த அவர், 2012 ஆகஸ்டில் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையம், ஒலிம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் மீது சட்டவிரோத கற்கள் வெட்டுதல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த முதன்மை குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, குற்ற வருமானம் பணமோசடியாக மாற்றப்பட்டதா என்பதை விசாரிக்க முறையீட்டாளரின் பல சொத்துகளை தற்காலிகமாக முடக்கும் உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை, பணமோசடி தடுப்பு சட்டம், 2002-ன் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாய அதிகாரியிடம் உறுதிப்படுத்த அனுப்பியபோது, முறையீட்டாளர் தனது பதிலில், குற்றச்சாட்டுகளுடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளித்தார். மேலும், ஒலிம்பஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து 2010-ஆம் ஆண்டிலேயே விலகியதாகவும், அதன் தினசரி செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது வருமானம் சட்டவிரோத சுரங்கத் தொழிலிலிருந்து கிடைத்ததல்ல என்றும், கேபிள் டிவி விநியோகம், திரைப்பட தயாரிப்பு, நிகழ்ச்சி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், குடும்பத்தினரிடமிருந்து பரிசாகவும் சொத்துகள் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்த விளக்கங்களை ஏற்ற தீர்ப்பாய அதிகாரி, 2019 அக்டோபர் 11-ஆம் தேதி சொத்து முடக்கும் உத்தரவை உறுதிப்படுத்த மறுத்தார். ஆனால், 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2025 நவம்பர் 19-ஆம் தேதி முன் தீர்ப்பை மாற்றி அமைத்தது. இதனையடுத்து தற்போது உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு தொடரப்பட்டுள்ளது.

இன்னமும் அழகிரியின் மகன் முழுமையாக குணமடையவில்லை என்ற செய்தி, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link