Share via:
ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தலைமையில் வழங்கப்பட உள்ள விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவுப்பட்டியல்கள் இவைதான் என்ற ஒரு தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய நாட்டின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.
ஜி20 மாநாட்டை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க டெல்லியை சேர்ந்த 80 ஆயிரம் காவலர்கள் உட்பட மொத்தம் 1.30 லட்சம் பேரும், நீல நிற உடையில் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவுப்பட்டியல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சர்வதேச தலைவர்களுக்கு அறுசுவை கொண்ட உணவுகளும், சாட் உணவுகளும் பரிமாறப்பட உள்ளன. மேலும் சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, இட்லி, புலாவ், அசைவ உணவுகள் மற்றும் சமோசா, ரசகுல்லா பானிப்பூரி உள்ளிட்ட சாட் உணவுகளும் பரிமாறப்பட இருக்கிறதாம்.
அவர்களுக்கான உணவு பட்டியலில் வெஜிடேரியன் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்துள்ளதை கொண்டாடும் வகையில் விருந்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டின் இடையே, பிரதிநிதிகளுக்கு உள்ளூர் சிறந்த உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், தென் இந்தியாவின் மசால் தோசை, பீகாரின் லிட்டி சோக்கா, பானி பூரி, சப்பாத்தி சாத், தஹி பல்லா உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சர்வதேச தலைவர்கள் இவ்விருந்தை தங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை