Share via:
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசு முறை பயணமாக 6 நாள்கள் முதல்
முறையாக வெளிநாடு செல்கிறார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை
ஈர்ப்பதற்காக முதலமைச்சர் .ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து
இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அஜித் பங்கேற்கும் போட்டியை விஜய் தொடங்கிவைப்பதாக
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதோடு, இந்த பயணம் மூலம் விஜய் மூன்று சாதனைகள் படைக்க இருப்பதாக
சொல்லப்படுகிறது. முதலாவது, தமிழ்நாட்டின் ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், நகைகள்,
வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் பொருட்களுக்கு இங்கிலாந்து
சந்தையில் சிறந்த அணுகலை வழங்குவது ஆகும்.
அடுத்ததாக புதிய உலகளாவிய மையங்களை ஈர்ப்பது மற்றும் தற்போதுள்ள
இங்கிலாந்து நிறுவனங்களைத் தங்களின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைச்
செயல்பாடுகளை விரிவுபடுத்த ஊக்குவித்தல்.
மூன்றாவதாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி, மணிமங்கலத்தில் முன்மொழியப்பட்ட
மையத்திற்காக, சில்வர்ஸ்டோனின் சுற்று உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும்
செயல்பாட்டு மாதிரியை ஆய்வு செய்தல். ஐரோப்பிய நிறுவனங்கள் ₹8,491 கோடி
மதிப்பிலான திட்டங்களை முன்மொழிந்துள்ளதாகவும், இதன் மூலம் 5,690 வேலைவாய்ப்புகள் உருவாக
வாய்ப்புள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஒரு முதலமைச்சர் வெளிநாட்டுப்
பயணம் செல்லும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால், எப்போதும்
இல்லாத வகையில் இன்று பொது மக்கள் கடல் அலையெனத் திரண்டது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

