Share via:
இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய
பேருந்து நிலையம் திறப்பு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற
திட்டப்பணிகள் தொடக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் பயணித்த முதல்வர்
வ்ஜய், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக 55 கி.மீ பயணித்து புதுக்கோட்டை செல்கிறார்.
இதற்கு ரோடுஷோ தொடங்கிய முதலமைச்சர் விஜய்யை வரவேற்க வழிநெடுக காத்திருக்கும் மக்கள்
உற்சாகமாக கை காட்டினார்கள்.
மாற்றத்திற்கான மகா சக்தியான விஜய் வருவதால் புதுக்கோட்டை மாவட்ட
எல்லையில் இருந்தே வரவேற்பளிக்க விழாக்கோலம் போல சிறப்பான ஏற்பாடு செய்துள்ளோம் என்று
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இந்த பயணத்தில் பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி, மலர் அலங்காரம்
என ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலம் கண்டுள்ளது.
அதேநேரம், இந்த விழா திடீரென நேற்றைய தினம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து
விட்டு அங்கிருந்து ரோடு ஷோ மூலம் ஆயுதப்படை மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்குவது என முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட
பந்தல், மக்கள் அமர்வதற்கான இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.
அதில், ஆயுதப்படை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை
நடத்த வேண்டாம் என முதல்வரின் பாதுகாப்பு படையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த
இடத்தை கைவிட்டு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்த நேற்று இரவு திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக நேற்று நள்ளிரவில் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.அருணா
தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து சுமார் 200 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கில், சுமார்
100 பயனாளிகளுக்கு முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடு பணிகள்
நடைபெற்றன. இந்த மாற்றம் முழுக்க முழுக்க முதல்வர் பாதுகாப்பு தொடர்பானது என்று தவெக
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதுக்கோட்டைக்கு விஜய் வருகை புரிவதை தீபாவளி போன்று
மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

