Share via:
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வருமான
ச.ஜோசப் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்
செயலாளர் டி.ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேற்று நேரில் சந்தித்துப்
பேசினார். அதன் எதிரொலியாக இன்று தமிழகத்தில் கூட்டணி உடைந்துள்ளது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ‘தவெக ஆட்சி மூன்று மாதங்களை
நிறைவு செய்யுமா என்ற கேள்விக்கு, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கூட்டணிகள் முரண்டுபிடிக்கின்றன.
எனவே, பார்க்கலாம்’’ என்று கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் இன்று, ‘’கம்யூனிஸ்ட்
கட்சி தனக்கேற்று ஒரு அமைப்பு நெறியை கொண்டுள்ளது. ஸ்டாலின் சந்தித்தபோது கூட அவர்
எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டது இல்லை. எந்த அழுத்தமும் தந்தது இல்லை. இப்போது
அவர் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. ஏனென்றால் அவருக்கும் தெரியும், நாடு மக்களுக்கும்
தெரியும். கம்யூனிஸ்ட் கட்சி தன்னியல்பில் கூடி அமைப்பாக கூடி அது விவாதிக்கும், அரசியலாக
முடிவெடுக்கும் என்று நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். தற்போது இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி திமுக கூட்டணியில் இல்லை. தற்போது உள்ள சூழலில் கூட்டணியில் இருக்க முடியாது’’
என்று கூறியிருக்கிறார்.
அதாவது த.வெ.க ஆட்சி 3 மாதங்கள் கூட நீடிக்காது என திமுக தலைவர்
ஸ்டாலின் பேசியிருக்க கூடாது என்பதையே விலகலுக்குக் காரணமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதேபோன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இல்லை என நான்கு நாட்களுக்கு
முன்பு சண்முகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, திமுகவின் பழைய கூட்டாளிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,
கம்யூனிஸ்ட் ஒட்டுமொத்தமாக காலியாகியுள்ளனர். இப்போது பிரேமலதா மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
புதிய வரவு யார் என்று பார்க்கலாம்.
