இளைஞரின் உயிரை பறித்த ரெயில் படிக்கட்டு பயணம்! சைதாப்பேட்டையில் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரைஸ் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்தபடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காலை நீட்டியபடி அமர்ந்திருந்த நிலையில் திடீரென்று அவரது இரண்டு கால்களும் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த நடைமேடையில் உரசியதாக தெரிகிறது. அதில் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்த அவர் சுமார் 150 […]
தாயின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகன்! என்ன தண்டனை தெரியுமா?

பெற்ற தாயை கொலை செய்த மகன் அவரின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த கொடூரனுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம். கடந்த 2017ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் குச்சொரவி என்ற இளைஞர் தனது 63 வயது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயை கொடூரமாக கொலை செய்த குச்சொரவி, அவரின் உடலின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயம் மற்றும் விலா எலும்புகளை எண்ணெயில் வறுத்து […]
டேட்டிங் செல்ல சம்பளத்துடன் விடுமுறை: எந்த நாட்டில் தெரியுமா?

தனியார் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது எந்த நாடு என்பது குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம். விடுமுறைகளில் பல வகை உண்டு. மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சாதாரண விடுப்பு. இவைகளில் குறிப்பிட்ட காலவரம்பை தாண்டினால் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்து விடுவார்கள். சில நிறுவனங்களில் மட்டும் சுற்றுலா செல்ல சிறப்பு விடுப்பு விடுவதும் உண்டு. ஆனால் தாய்லாந்தில் […]
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை! நடந்தது என்ன?

திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இணைவது வாடிக்கையானது. ஆனால் சில சமயங்களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பும், மற்றொரு தரப்பில் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. பல்வேறு நாடுகளில் இதற்கு தடையும் கிடையாது. ஆனாலும் வித்தியாசமாக இன்னொரு திருமண பந்தம் இருக்கிறதென்றால் அதுதான் சோலாகாமி என்ற முறை. அதாவது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் முறை. வெளிநாடுகளில் மணமகள், மணமகன் இன்றி தன்னைத்தானே திருணம் செய்து […]
லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!

லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில் அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது எதற்காக என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் சர்வதேச பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். […]
தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை!

பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான துளசிமதி, நித்யஸ்ரீ, மணிஷா மற்றும் வீரரான மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் […]
திருப்பதி லட்டு விவகாரம்: பவன்கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!

லட்டு விவகாரம் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் வருந்துவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணிடம், நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது மெய்யழகன் திரைப்படம். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மொத்த படக்குழு ஈடுபட்டுள்ளது. படப்ரமோஷனுக்காக ஆந்திராவிற்கு சென்ற கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி நகைச்சுவையாக அது ரொம்ப சென்சிட்டிவ் எனக்கு […]
2 உயிர்களை பலி வாங்கிய கூகுள் மேப்! என்ன நடந்தது தெரியுமா?

கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோமாளி திரைப்படத்தில் கூகுள் மேப் காட்டிய வழியில் செல்லும் யோகிபாபு பல்வேறு இன்னல்களை சந்திப்பதையும், ஆட்டோக்காரருக்கு தெரியாத வழியா என்று ஜெயம்ரவி அவரை சரியான இடத்திற்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் இப்போது இந்த செய்திக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக கூகுள்மேப்பில் முகவரியை டைப் […]
இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம். மோடி ஆதரவாளர் ராஜபக்ஷே அவுட்

இலங்கை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது இலங்கைக் கொள்கையை அதானியின் வணிக நலனை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது என்று எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள். ஏனென்றால் மோடியின் ஆதரவு பெற்ற ராஜபக்ஷே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். மக்கள் நலனையும் மக்களின் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ளாமல் அரசாட்சி செய்பவர்களுக்கு இந்த கதியே […]
கொடைக்கானலில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல்!

சுற்றுலாதலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. பரிட்சை விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம். மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட சில பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது. அந்த வகையில் கொடைக்கானல் அருகே உள்ள தொலுக்கம்பட்டி பகுதியில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். […]

