News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை! ஓடவிட்டு வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!

சென்னையை அடுத்த வீச்சூரில் அ.தி.மு.க. பிரமுகர் மர்ம கும்பால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வீச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாகவும், வீச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சுமன் (வயது 38) அ.தி.மு.க.வில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும் சுமன் ரியல் எஸ்டேட், […]

தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.     கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.     இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]

தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! முதலமைச்சர் எச்சரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் 2 நாள் ஆலோசனை மாநாட்டில், பொய் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும், நாளையும் (அக்.3 மற்றும் அக்.4) கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற […]

கிராம சபைக்கூட்டம்! விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தலைமறைவு!

விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் தொடர்பாக  தலைமறைவாக இருந்து வரும் ஊராட்சி செயலர் தங்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.2) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் கூடின. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளத்திலும் கிராமசபை கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையிலான கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊரட்சி […]

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! களத்தில் குதித்த அமைச்சர் அன்பில்!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணராவிரத போராட்டத்தை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 125 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மற்ற இடை  நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தாங்கள் பட்டினி கிடப்பதாக […]

எஸ்கலேட்டரில் சிக்கி உயிர் தப்பிய மகள்! பிரபல ஷெஃப் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் இயங்கி வரும் பிரபல மாலின் எஸ்கலேட்டரில் தனது மகள் சிக்கி உயிர் பிழைத்ததாக ஷெப் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரபல சமையல் கலை நிபுணரான ஷெப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் இவர் மிகவும் ரூடானவர் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக மிகவும்  நகைச்சுவையாக அந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். […]

வகுப்பறை மேஜையில் இசைக் கச்சேரி! மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

பள்ளி வகுப்பறை மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடி வெளியான மாணவர்களின் வீடியோவை கேரள மாநில கல்வித்துறை மந்திரி மனதார பாராட்டியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் பல்வேறு திறமைகளை தங்களுக்குள்ளே மெருகேற்றி வளர்த்துக் கொள்வார்கள். இசை, விளையாட்டு என பல்வேறு திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தும் போது அவர்களை அரவணைத்து, ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருப்பது பள்ளி ஆசிரியர்கள் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கேரள […]

காந்தி ஜெயந்தி! திருவுருவப் படத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக […]

கிராமசபை கூட்டத்தில் அனைவரது கருத்தும் முக்கியம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை திறந்து வைத்து அனைவரது கருத்தும் முக்கியம் அவை பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.   மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டஙகள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார்.   அவர் பேசும்போது, ‘‘மக்களாட்சி முதல் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் முறையாக […]

7வது நாளாக தொடரும் போராட்டம்! இடைநிலை ஆசிரியர்கள் பிடிவாதம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]