News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்! வீடியோ வைரல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வந்தனர்.   இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கோவையில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் நோக்கர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசிவிட்டார் என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார். எனவே அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்பட்டால் முறிந்த கூட்டணி மீண்டும் […]

எடப்பாடி பழனிசாமி- தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திடீரென்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிமுன் அன்சாரி கூறும்போது, […]

எம்.எல்.ஏ. காலில் விழுந்து கதறிய பெண்! ஏன் தெரியுமா?

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வெங்கடேசனின் காலில் திடீரென்று விழுந்து கதறிய கிராமத்து பெண் ஒருவர், மதுபானக் கடையை மூடிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராமசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.   அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூடியது. […]

முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு! இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் […]

சென்னை மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள்! தெற்கு ரெயில்வே திட்டம்!

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் நம்புவது மின்சார ரெயில் சேவையைதான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்காக மின்சார ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பல லட்சத்தையும் தாண்டி அதிகரித்து வருகிறது.   அதன்படி தெற்கு ரெயில்வேயின் ரெயில் கோட்டம் சார்பில், […]

ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ள பா.ஜ.க. தலைமை! டி.டி.வி. அடுத்த மூவ் என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் […]

தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   நடிகர் சூர்யா, விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகனை தயாரித்தவர் வி.ஏ.துரை. 69 வயதான இவர் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார்.   கடந்த சில […]

பேருந்து நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவன் படுகொலை! அதிர்ச்சி தகவல்!

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 17 வயதான இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக மேலபுளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் மாணவன் ஜீவாவுக்கு பக்கத்தில் வந்து நின்றார். திடீரென்று […]

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு குவியும் பாராட்டு! என்ன செய்தார் தெரியுமா?

தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சாலையில் மயங்கிக் கிடந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை மீட்டு தனது சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் செயலாற்றி வருகிறார். இவர் சென்னை மதுரவாயல் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று (அக்.2) தனது காரில் சி.ஐ.டி. நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையில் திடீரென்று கும்பல் கூடியிருப்பதை பார்த்து அது […]