நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். […]
டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி! திருவண்ணாமலையில் சோகம்!

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புகழேந்தி, கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற 10 வயது மகளும் இருந்தார். பிரியதர்ஷினியின் தாய் பிரசவத்தின் போது இறந்ததால் புகழேந்தி சிறுமியை தனியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி 5ம் […]
3 நாட்கள் போலீஸ் காவலில் கருக்கா வினோத்! நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கருக்கா […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை! தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சமயத்தில் தான் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

தமிழக மீனவர்கள் 64 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லையை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனால் கடந்த 2 வாரங்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்கும் படி மத்திய, மாநில அரசை […]
படுத்த படுக்கையாக இருந்த இயக்குனரின் மனைவி! மு.க.ஸ்டாலின் உதவிக்கரம்!

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு மருத்துவக்குழுவுடன் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்தான் இயக்குனர் விக்ரமன. அதைத்தொடர்ந்து பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து, வானத்தை போல உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவர் நினைத்தது யாரோ என்ற திரைப்படத்திற்கு பிறகு […]
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழா இன்று கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
லியோ வெற்றி விழா அனுமதி! தரமான சம்பவம் ரெடி!

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாள் முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என விஜய் ரசிகர்கள் […]
தொடர் மழை: ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20க்கும் […]
மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அங்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழ் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துமராமலிங்கத் தேவரின் […]

