News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் முழுமையாக நிரம்பிய 64 ஏரிகள்! கனமழை எதிரொலி!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 16ம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி இன்று அதிகாலை முதல் தமிழகம், […]

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையில் உணரப்பட்டது!

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.   இந்திய பெருங்கடலில் இன்று (நவ.14) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது.   நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு குடும்பத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய […]

ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.   ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதே போல் திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் கட்டப்பட்ட நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.   அதேபோல் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் […]

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மிதமான மற்றும் கனமழை மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் […]

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பரபரப்பு தகவல்கள்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ரிஷிசுனக் திறமையாக கையாண்டு வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது.   […]

234 தொகுதிகளில் தி.மு.க. வாகன பேரணி! அமைச்சர் உதயநிதி நாளை தொடக்கம்!

234 தொகுதிகளில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரமாண்டமான இருசக்கர வாகன பிரசார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.15) தொடங்கி வைக்க உள்ளதால் தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ‘‘மாநில உரிமைகளை மீட்க அழைக்கிறார் உதயநிதி’’ என்ற முழக்கத்தோடு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரசார பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனப் பேரணியின் போது 188 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.   234 […]

குழந்தைகள் தினம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதிவு!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசத்தின் பிணைப்பால் ஜவஹர்லால் நேருவை ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர். அதன்படி கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பின்னர் நவம்பர் 14ம் தேதி […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! நவ.17 கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு கிரிவலம் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கிய […]

இந்திய வம்சாவளி பெண் மந்திரி திடீர் பதவி நீக்கம்! முக்கிய தகவல்கள்!

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென்று பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக். இவரது மனைவி அக்ஷயதா இந்தியாவில் பிறந்தவர். இவர் வேறு யாருமில்லை இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள். பிரதமர் ரிஷி சுனக் உள்பட இங்கிலாந்து அமைச்சரவையில்  இந்திய வம்சாவளியினர் பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் உள்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் […]

19 வயது இளைஞர் அடித்துக் கொலை! திருப்பத்தூரில் பரபரப்பு!

காதல் விவகாரத்தில் 19வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சுகேஷ் என்கிற 19 வயதான மகன் இருந்தார். இவர் காதலித்து வந்த ஒரு பெண்ணை கார்த்திக் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் இடையே காதல் குறித்து தகராறு இருந்து வந்துள்ளது.   காதல் விவகாரம் குறித்து பேச்சு முற்றியதில் சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார். […]