News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

களத்தில் நடிகர் விஜய்! கல்யாண மண்டபம் வைத்தும் உதவாத ரஜினி!

நடிகர் விஜய், தன்னோட மக்கள் இயக்க நிர்வாகிகள் எல்லாரும சேர்ந்து மிக்ஜாம் புயலால பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியா தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யணும்னு அன்பா கட்டளை போட்டு இருக்காரு. இதன் மூலமாக பொதுமக்களின்  அன்பை பெற்றால் எதிர்காலத்தில் அரசியல் என்ட்ரி கொடுக்க வசதியாக  இருக்கும்னு நினைத்து இப்போது  களத்தில்  இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.  கடந்த 2015ம் வருஷம் வந்த வர்தா புயலையே பீட் பண்ணிடுச்சு 2023ம் வருஷம் வந்த மிக்ஜாம் புயல். தாழ்வான பகுதிகள்ல […]

மிதக்கும் சென்னை ரூ.4 ஆயிரம் கோடி என்னாச்சு?

சென்னையில பெய்துக்கிட்டு இருக்கிற கனமழை ஒரு பக்கம் இருக்க, நிறைய இடங்கள்ல தேங்கி நிக்கிற மழைநீரையும், அதில மூழ்கிப் போயிருக்கிற புறநகர் வீட்டுமனைகளையும் குறிவெச்சு இப்ப மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாகிட்டு இருக்காங்க. இவங்களுக்கு அப்படியே கண்டெண்ட்ட வாரி கொடுத்துட்டு இருக்கு இந்த மழை.சென்னை நெடுஞ்சாலைகள்லயும், சாலைகள்லயும் மழை நீர் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. அதிலயும் சில பகுதிகள்ல முட்டிக்கு மேல தண்ணீர் ஆறா ஓடுது. கார், பஸ், பைக்குன்னு வண்டியில போகாம ஒரு போட் கொண்டு […]

ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியின் ஆண்டுவிழா! கண்ணை கவர்ந்த மாணவர்கள்!

ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியின் 45வது ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி கண்ணை கவரும் வகையில் அமைந்தது. சென்னை வடபழனி துரைசாமி சாலையில் ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளி அமைந்துளளது. இங்கு நேற்று (டிச.1) பள்ளியின் 45வது ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த சங்கீதா மகினினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 4.30 மணியளவில் ஆண்டுவிழா வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாடல்களும், நடனங்களும், நாடகங்களும் பார்வையாளர்கள் மற்றும் […]

கி.வீரமணியின் 91வது பிறந்தநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், […]

ரூ.47 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதன் விலை குறைவுக்காக காத்திருப்பது வழக்கம்தான். ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதேநிலைதான் தற்போது டிசம்பர் மாதத்திலும் இருந்து வருகிறது.    அதன்படி சென்னையில் இன்று (டிச.2) ஆபரண தங்கத்தின் விலை […]

அதிரடியாக குறைந்த ஆவின் நெய் விலை! எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   தமிழகத்தில் ஆவின் நிர்வாக தயாரிப்பு பொருட்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் […]

தமிழகம் முழுவதும் 2,000 மருத்துவ முகாம்கள்! முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பொது மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருவதால் இன்று 2,000 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன மழை கொட்டி வருகிறது. மேலும் டிசம்பர் 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பொது மக்கள் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மழைகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் அறிக்கை […]

நியூ லுக்கில் விஜய்சேதுபதி! ‘ட்ரெய்ன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ‘ட்ரெய்ன்’ படத்திற்கான படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு நியூலுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.   கதாநாயகன், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது. இருப்பினும் வில்லன் கதாபாத்திரத்தில் நிறைய காட்சிகள் கத்திரிக்கப்படுகின்றன என்றும் கதாநாயகனை விட வில்லன் குறைந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறிய அவர், இனி […]

கலைஞர் எதையும் தைரியமாக எதிர்கொள்வார்- கனிமொழி எம்.பி. பேச்சு!

தி.மு.க. மகளிர் அணி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற  ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.   தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எம்.பி. தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் இன்று (டிச1.) திமுக மகளிர் அணி சார்பில் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.   வினாடி  வினா […]

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது! பரபரப்பு தகவல்கள்!

அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரிடம் மாவட்ட எஸ்.பி. தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.   கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது. அதே போல் ஒரு சம்பவம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மீது […]