தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்! கேரளா உறுதி!

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில், பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வரும் தமிழக பக்தர்கள் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதில் நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதிகளில் பக்தர்கள் போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் […]
மிக்ஜாம் புயல்: மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக பெருமழை வெள்ளத்தில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் சென்னைதான் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தெருக்களில் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டது. மேலும் பொதுமக்களின் வாகனங்கள், […]
மிக்ஜாம் புயல் பேரிடர்! பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுதுகோல் வினியோகம்!

எஸ்.எஸ்.எஸ். கர சேவை அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத பெருமழை பொழியும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெரியளவில் சேதத்தை விளைவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகப்பை மற்றும் எழுதுப்பொருட்கள் உள்ளிட்டவை நாசமானதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எஸ். கர சேவை […]
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்! அமைச்சர் உதயநிதி ரூ.1.77 கோடி நிதி!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.1.77 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார். தமிழக அரசு விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புதிய அறிவிப்புகளையும் தமிழக அரசு […]
வழிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி! முதலமைச்சரை சந்தித்து பேச அழைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவி தன்னிடம் […]
ஆரோவில் 65வது நிர்வாகக்குழு கூட்டம்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

ஆரோவில் அமைப்பின் 65வது நிர்வாகக்குழுக் கூட்டம் ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று (டிச.12) ஆரோவில் அமைப்பின் 65 ஆவது நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் ஆரோவில் நிர்வாக குழுத் தலைவருமான ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் […]
டிச.16ம் தேதி சென்னையில் பன்னிரு திருமுறை திருவிழா! மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்பு!

சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா ஐ.எம்.பி.ஏ. ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஐ.எம்.பி.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி சென்னையில் முதல்முறையாக பன்னிரு […]
தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்! முதலமைச்சரிடம் வாழ்த்து!

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பொன்னுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோன் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களான மாறன், ரத்தினசாமி, புஷ்பராணி, பொன்னுசாமி, சரவணன், சாத்துக்குட்டி, மல்லிகா, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், தெய்வம், […]
நாகூர் கந்தூரி விழா! 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க முதலமைச்சர் அரசாணை வெளியீடு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை எந்தவித கட்டணமும் இன்றி வழங்குவதற்கான அரசாரணையை இன்று (டிச.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார். உலகப்பிரசித்தி பெற்ற நாகூர் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 45 கிலோ எடை கொண்ட […]
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதி! ரூ.3 கோடி வழங்கிய எம்.ஆர்.எப். நிறுவனம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி […]

