தமிழ் நாட்டுக்கு மட்டும் இரண்டு கவர்னர்களா..? உதயநிதியுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கடந்த ஆட்சியிலும், இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவ்வப்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நின்று வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழிசை எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்..’ என்று காட்டமாக பதில் அளித்தார். அதன்பிறகு இருவரும் மாறி மாறி புகார் செய்து […]
பா.ஜ.க.வின் பால் கனகராஜை தோற்கடிச்சுட்டாங்க… களம் இறங்கிய தி.மு.க.. மூத்த புள்ளிகள்

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்.எச்.ஏ.ஏ.) தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி அடையவேண்டும் என்று போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பால்கனகராஜ் தோற்றுப்போயிருப்பது, கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த தேர்தல் கடந்த 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. பல்வேறு வழக்குகளைத் தாண்டி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த […]
ரஜினிகாந்தை சந்தித்த டிமான்டி காலனி 2 தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, டிமான்டி காலனி 2 திரைப்பட தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டிகாலனி பெரியளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அப்படக்குழுவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் அதைத்தொடர்ந்து டிமான்டி காலனி2 திரைப்படம் தயாராகும் என்ற அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிமான்டிகாலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, நடிகை பிரியாபவானி சங்கர் […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: 5,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய கனிமொழி எம்.பி.!

மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் […]
கருணாநிதி சிலைக்கு அனுமதி இல்லையா..? மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்புக்கு ஆபத்து

கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சிலைகளை நிறுவும் முயற்சியில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதுவும் முக்கியமாக ஒவ்வொரு ஊரின் முக்கிய பகுதிகளிலும் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்த வகையில் கருணாநிதியின் சினிமா பங்களிப்பை காட்டும் வகையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் கருணாநிதி சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியது. தனியாரின் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவக்கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. எதிர்ப்பு வலுப்பதைக் கண்டதும், அந்த இடத்தில் கருணாநிதி சிலையை […]
ஓடி ஒளியும் போதைப்பொருள் குற்றவாளிகள்… அதிரடி வேட்டையில் 148 பேர் கைது…

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுஜ் பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுக்க அதிரடி வேட்டை நடத்திவருகிறார்கள். அதன்படி நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 23 வரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, 886 கஞ்சா, 1 கிலோ மெத்தகுலோன், 100 டைடோல் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன், […]
தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கிழக்கு திசைக் காற்றில் மாறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி: அமைச்சர் உதயநிதி ஆய்வு!

எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை அமைச்சர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் கச்சா எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவுகள் படிந்து நாசமானது. மேலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தநிலையில் அதனுடன் சேர்த்து எண்ணெய் […]
மிக்ஜாம் புயல் நிவாரணத்தொகை: புதுப்பேட்டை ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்!

சென்னை புதுப்பேட்டையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நிவாரணத் தொகைக்கான டோக்கன்களை வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்து அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியது. வீட்டு உபயோகப் பொருட்கள், பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியது. […]

