News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் மாநாடு முதல் பாலில் சிக்ஸர்… ஆனால், இப்படியொரு ஆபத்து இருக்கிறதே..?

லெட்டர் பேடு கட்சித் தலைவர் என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றியடையச் செய்வதற்காக பக்காவாக 200 பேர் கொண்ட குழுவை நடிகர் விஜய் நியமனம் செய்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், மாநாட்டுக்கு வானிலை ஒத்துழைக்காது என்று கிடைத்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அரசியல் […]

உயிர் பயத்துடன் வானில் இரண்டரை மணி நேரம். உண்மையில் நடந்தது என்ன..?

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 6 குழந்தைகள் உட்பட 141 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக விமானம் மேலே ஏறியதும் உள்ளே செல்லவேண்டிய சக்கரங்கள் செல்லவில்லை. அதேநேரம், அதிக அளவு எரிபொருள் இருக்கும் நேரத்தில் உடனடியாக கீழே இறங்குவதும் ஆபத்தாக முடியலாம் என்பதால் வானில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை கீரனூர், விராலிமலை பகுதிகளில் வட்டமடித்தது. […]

10 ஆண்டுகளில் 75 ரயில் விபத்துகள்..! அதானிக்காக ரயில்வே சீர்குலைக்கப்படுகிறதா..?

கடந்த 10 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் ரயில்வே துறை ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் 2024 வரை 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க உயிர்கள் பறி போயிருக்கின்றன. இந்த விபத்துகளில் இருந்து அரசு எந்த பாடமும் படிக்கவே இல்லை, இப்படி விபத்துகள் ஏற்படுவதை விட தனியாரிடம் கொடுத்துவிடலாம் என்று மக்களே சொல்லும் நிலையை உருவாக்கி, அதானி கையில் ரயில்வே துறையை ஒப்படைக்கப் போகிறது மோடி அரசு என்பது தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக […]

மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு திடீர் கடிதம்!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.   தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு.   லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் கர்நாடகா மற்றும் கோவா கடற்கரை […]

யாருய்யா இந்த முரசொலி செல்வம்..? எல்லா வி.ஐ.பி.களும் அஞ்சலி செலுத்துறாங்க

முரசொலி செல்வம் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் தி.மு.க.வின் பரம விரோதியான அண்ணாமலை தொடங்கி சீமான் வரையிலும் அஞ்சலி பதிவு போடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே போய்விட்டார். கட்சி தொடங்காத விஜய்யின் மனைவி சங்கீதா நேரடியாகச் செல்கிறார். அரசியல், சினிமா எதிலும் முகம் காட்டாமல் இத்தனை பேரை இழுத்திருக்கும் முரசொலி செல்வம் யார்.? முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மூத்த மகள் செல்வியின் கணவர். இந்த […]

விஜயகாந்துக்குப் பதில் விஜய் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி? யாருக்காக செய்கிறார் திருமாவளவன்..?

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் வைகோ ஆகியோர் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி நடிகர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக களத்தில் நிறுத்தினார்கள். இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளும் இடம் பிடித்தன. மக்கள் நலக்கூட்டணி எங்கேயும் டெபாசிட் வாங்கவில்லை என்றாலும் தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்பட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இதையடுத்து, இந்த கூட்டணிக்குப் பின்புலமாக ஜெயலலிதா இருந்தார் என்றும் விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மூலமே பேரம் […]

ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத 10 சுவாரசிய தகவல்கள்!

பிரபல தொழில் அதிபர் என்ற அடையாளத்தையும் தாண்டி எளிமையான மனிதர், மனிதநேயமிக்க மனிதர் என்று பலராலும் புகழப்பட்டவர்தான் மறைந்த ரத்தன் டாடா. உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் வயது மூப்பு காரணமாகவும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரைப்பற்றி பலரும் அறிந்திராத சுவாரசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.   1. டாடா குழுமத்தை நிறுவிய ஜம்செத்ஜி டாடாவின் பேரன் தான் ரத்தன் நவல் டாடா. இவர் […]

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்!

பிரபல தொழில் அதிபரும் மனிதநேயமிக்க மனிதருமான ரத்தன் டாடா தனது 86 வது வயதில் நேற்று நள்ளிரவு  (அக்டோபர் 9) காலமானார்.   சூரத்தில் கடந்த 1937ம் ஆண்டு நவல் டாடா மற்றும் சுனு தம்பதியின் மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த இவர், டாடா ஐ.பி.எம்.இல் பணியாற்றினார். அதிகளவு இந்தியப் பற்று கொண்ட அவர் தாயகம் திரும்பியதும் தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் இறங்கினார். அதைத்தொடர்ந்து டாடா […]

கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்! பிரச்சினையை கையில் எடுத்த எச்.ராஜா!

கோவில் ரொம்ப புனிதமான இடம். அங்க கேலி, கிண்டல், கூத்துக்கு இடம் கிடையாது என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழகத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.   உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகியான இளையராஜா கோவிலுக்கு வந்த நிலையில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை தன்னுடைய செல்போனில் வீடியோ […]

சாம்சங் நிறுவனத்தின் கையாளாக செயல்படும் தி.மு.க.! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வருகிறது சாம்சங் தொழிற்சாலை. அங்கு பணியாற்றி வரும் பணியாளர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.   இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை […]