4 ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப்..? வெள்ளை அறிக்கை வில்லங்கம்

ஒரே ஒரு நாள் 6 செ.மீ. மழைக்கே தண்ணீர் வெள்ளமாக நிற்கிறது என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி, ‘’மழை நீர் எங்கேயும் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப் ஆகிறார் என்ற வில்லங்கம் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’மழை நீர் தேங்காத வகையில் 4000 கோடிக்கு திட்டங்களை வகுத்த அரசு, அதை முறையாக […]
விஜய் மாநாட்டில் தந்தை சந்திரசேகருக்கு மறுப்பு. சங்கீதா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ் ஆஜர்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தந்தை சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், எந்தக் காரணம் காட்டியும் அங்கே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநாடு நடைபெற இருக்கும் விக்கிரவாண்டியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார். மழை வந்தாலும் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய […]
சென்னையில் இனிமே யாரும் வீடு கட்டக் கூடாதா? மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னையில் மழை நின்று போனாலும் வெள்ளம் வடிவதாக இல்லை. அரசு இயந்திரம் இரவு பகலாக வேலை செய்தாலும் உடனடி தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் கட்டுமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதே தீர்வு என்று சுற்றுச்சூழல் எச்சரிக்கை செய்கிறார் சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் தினமும் அறிக்கை போர் நடத்திவருகிறார். ஸ்டாலினுடன் நேரடியாக மோதவில்லை என்றாலும் சிக்கலான விஷயங்களை நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார். இந்த நிலையில் இன்றைய […]
ஏரிக்குள் வீடு… பாலத்தில் கார்கள். கடையெல்லாம் காலி… சென்னைக்கு என்ன தான் தீர்வு..?

சென்னையின் இயற்கை வடிகால்களான கூவம், கொசஸ்தலை, அடையாறு ஆகிய மூன்று நதிகளையும் பக்கிங்காம் கால்வாயையும் விழுங்கி வீடுகள், பேருந்துநிலையம் என கட்டியிருக்கிறார்கள் மக்கள். இதனால் ஒவ்வொரு மழை நேரத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பது தடுக்க முடியாமல் போகிறது. இதையொட்டி பாலங்களில் எல்லாம் கார்களை பாதுகாப்பு கருதி மக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவுகிறது. இது குறித்துப் பேசும் பொதுநலச் சங்கத்தினர், ‘’சின்ன மழை பெய்தாலே தங்கள் காரைக் கொண்டுவந்து பாலத்தில் […]
பட்டியலின உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் . பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம்

பட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி இயக்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தினர். பத்திரிகையாளர் இரா.வினோத் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் சமூக செயற்பாட்டாளர் முத்துபிரதீபன் […]
கனமழை எச்சரிக்கை: நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று (அக்டோபர் 14) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் வலுப்பெற்று நகர்ந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் […]
சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மக்களின் வேகமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் துரித உணவகங்களும், ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் சவர்மா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை கீழ் நான்காம் வீதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் துரித உணவகத்தை நடத்தி […]
சீமான் கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..? ஆதாரத்துடன் போட்டுக் கொடுக்கும் தி.மு.க.

திரள்நிதி மூலம் தன்னுடைய வாழ்க்கையையும் கட்சியையும் நடத்திக்கொண்டு இருப்பவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். அவரது கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடில் வாங்கப்பட்ட பண பரிவர்த்தனையில் குளறுபடி நிலவியிருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தவேண்டும் என்று தி.மு.க.வினர் ஆதாரம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க.வினர், ‘’தலைமை அலுவலகம் ராவணன் குடிலுடைய ஆவணப்படி மொத்த சந்தை மதிப்பு 7.5 கோடி.. ஆனால் 1.5 கோடிக்குதான் பத்திரப்பதிவு ஆகியிருக்குறது. மீதம் 6 கோடி கருப்புப்பணமாக கைமாறியுள்ளது. எனவே இதை அமலாக்கத்துறை […]
விஜய் மாநாட்டுக்கு 2,500 பொறுப்பாளர்களா..? இவ்வளவு பேர் வந்தா தாக்குப்பிடிக்குமா..?

வரும் 27ம் தேதி நடைபெற இருக்கும் விஜய் மாநாட்டுக்கு 234 தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்களாக 1638 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கெனவே பல்வேறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டதில் இதுவரை 2,500 பேருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் வாலண்டியர்கள் 5,000 பேர் நியமிக்க இருப்பதாக சொல்லப்படுவதைக் கண்டு, மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் வரும் […]
சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்தா..? நெஞ்சு வலி பின்னணி

சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக குறிப்பாக உதயநிதிக்கு எதிராக மீண்டும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுக்கு சங்கர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. பெண் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். […]

