வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம். அதிர்ச்சியில் இந்தியா

ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை […]
பெண் சிங்கம் வினேஷ் போகத்துக்கு ராகுல் பாராட்டு. மோடிக்கு தரமான பதிலடி

இறுதிப் போட்டியில் தங்கத்திற்கு அருகில் நிற்கும் வினேஷ் போகத்திற்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா போன்ற மாபெரும் தேசத்துக்கு பதக்கப்பட்டியலில் மரியாதைக்குரிய இடம் கிடைக்கவே இல்லை. இதற்குக் காரணம் பிரிஜ்பூஷன் போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தான் என்பது அம்பலப்பட்டுள்ளது. வினேஷ் போகத் பெற்றிருக்கும் வெற்றி சாதாரண ஒன்று அல்ல. தொடர்ந்து 82 சர்வதேசப் போட்டிகளில் வெற்றியைக் காணாத, நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை, முன்னாள் உலகச் […]
ஒலிம்பிக்கில் லக்ஷயா சென் வரலாற்று சாதனை… பதக்கம் கிடைக்குமா?

குட்டியூண்டு ஜப்பான், இத்தாலி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நடத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில், நம் நாட்டு வீரர்கள் இன்னமும் தட்டுத் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் […]
பாரிஸ் ஒலிம்பிக்: 3வது பதக்கத்தை வென்ற இந்தியா!

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்தியா தனது 3வது பதக்கத்தை பதிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டித்தொடரின் 7வது நாளான இன்று (ஆகஸ்ட்1) ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே […]
தனியார் நிறுவனம் நடத்தும் கார்பந்தயம்! முனைப்பு காட்டும் தி.மு.க.வின் பின்னணி!

தனியார் நிறுவனம் நடத்த உள்ள பார்முலா4 கார்பந்தயம் சென்னையில் ஆகஸ்டு மாத இறுதியில நடைபெற உள்ளது. இதனை நடத்துவதற்காக தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருவது ஏன்? என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மற்றும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு (2023) பார்முலா4 கார் பந்தயத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி தொடங்கும் […]
உதயநிதியின் கார் பந்தயத்துக்கு முரட்டு வசூல்..? ஆதாரம் காட்டும் அண்ணாமலை

அமைச்சர் உதயநிதியின் முயற்சியின் காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா – 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அப்போதே இந்த போராட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இனி, போட்டி நடைபெறாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 முதல் சென்னையில் ரேஸ் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், […]
2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெண்கலம் வென்ற மனுபாக்கர்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் கடந்த 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (29ம்தேதி) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 3வது இடத்தை பிடித்தார். அதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக் […]
ஒலிம்பிக் விழா நடக்காமல் செய்ய சதி? குழப்பத்தில் சர்வதேச நாடுகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். போட்டி தொடருக்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் 600 படகுகளில் செய்ன் நதியில் ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சிறிது […]
சபாஷ் ரோஹித், சூப்பர் கோலி, மாஸ் பும்ரா

– இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி ஐசிசி உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று இந்திய மக்களுக்கு பெரும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் ரோகித், அதிரடி மன்னன் விராட் கோலி மற்றும் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய பும்ரா. இந்தியாவின் வெற்றி ஆட்டம் எப்படியிருந்தது என்று பார்க்கலாம். டாஸ் வென்றதும் தன்னுடைய பாணியில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா. முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணிக்கு […]
பாரா சாம்பியன்ஷிப் தங்கம்… மாரியப்பனுக்கு குவியும் பாராட்டுகள்.

முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன. 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 171 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. டி63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தினார். இதன் மூலம் புதிய […]

