News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உதயநிதியின் கார் ரேஸ் நிறுத்த இத்தனை எதிர்ப்புகளா..? வர்ண ஜபம் நடத்துற அளவுக்குப் போயிட்டாங்க

நீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டாலும் உதயநிதியின் கார் ரேஸை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தொடர் குற்றச்சாட்டுகள் வைத்துவருகிறார்கள். வர்ணஜபம் நடத்தி பேய் மழை, புயல் ஏற்படுத்தி இந்த போட்டியை நிறுத்தும் அளவுப் போயிருக்கிறார்கள். எதிர்கட்சியான அ.தி.மு.க.வினர், ’ரேஸ் நடத்த பணம் இருக்குது, ரோடு போட மனம் இல்லையா?’’ என்று சென்னையின் குண்டுகுழியுமான சாலைகளை எல்லாம் படம் எடுத்துப் போட்டுவருகிறார்கள். எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா ஆட்சியில் நடக்கும் கார் ரேஸால் சென்னையின் பிரதான […]

பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் 2 பதக்கங்களை வென்ற இந்தியா!

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி தொடரில் ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் என இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது.   மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.   இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி […]

ஜெய் ஷாவுக்கு ஐ.சி.சி. யோகம் அடிச்சாச்சு. ராகுல் காந்தி ரியாக்‌ஷன் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சஷாங்க் மனோகர் ஆகியோர் பதவி வகித்திருக்கும் நிலையில், ஐந்தாவது இந்தியராக பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்ட நேரத்திலேயே அதிகாரத்தின் மூலம் அந்த பதவிக்கு வந்ததாக எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஐ.சி.சி. சேர்மனாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போது […]

50.100 கிராம் தங்கம் வினேஷ் போகத்துக்கு பிரமாண்ட வரவேற்பு. நெகிழவைக்கும் கண்ணீர் காட்சிகள்.

ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி தினத்தில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். வெள்ளிப்பதக்கத்தைப் பெறுவதற்கு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த முயற்சியும் தோல்வியைத் தழுவியதால் வெறும் கையுடன் நாடு திரும்பினார் வினேஷ் போகத். தங்கப் பதக்கம் பெறவில்லை […]

ஒலிம்பிக்கில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான். இப்படி ஒரு மோசமான சாதனை

கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்தது. இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னணி இடம் பிடித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.           இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் […]

வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்! வலுக்கும் ஆதரவு!

33வது ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் இந்திய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகாட் தனக்கு நடந்த அநீதியால் அதிருப்தியடைந்து ஓய்வை அறிவித்தார்.   பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கியூபா நாட்டு வீராங்கனையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். கடந்த 8 மணி நேரத்தில் 3 சர்வதேச வீராங்கனைகளை வெற்றி கண்ட வினேஷ் போகாத் அமெரிக்க […]

உதயநிதியின் கார் பந்தயத்துக்கு மீண்டும் ஆப்பு..? உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடத்த இருந்த ரேஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ரேஸ் கார் பந்தயம் விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளது. இதனை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் […]

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னொரு அவமானம். வீரர்களை விட அதிக அதிகாரிகள் அனுப்பப்பட்ட கொடுமை.

வினேஷ் போகத் விவகாரத்தின் காயமும், வேதனையும் ஆறுவதற்குள்  மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம், வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிற ஊழியர்கள் அனுப்பப்பட்ட தகவலும்ம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்தியா செலவளித்த தொகை 13.13 கோடி ரூபாய். இந்த பாரீஸ் போட்டிகளுக்கு 33.68 கோடி ரூபாய். இதில் வேதனை என்னவெனில், இந்தியாவின் சார்பில் சென்ற விளையாட்டு வீரர்களின் […]

வினேஷ் போகாட் ஓய்வு அறிவிப்பு. சதி செய்தது அம்பானியின் டாக்டரா?  

நூறு கிராம் எடை வித்தியாசம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற முடியாமல் போனதுடன், வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவரது சதிக்குக் காரணம் என்று அம்பானி மருத்துவமனையின் டாக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வினேஷ் போகட், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகாத்!

2024 ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாத் தற்போது பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நேற்று (ஆக.6) நடைபெற்ற பெண்கள் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் கியூபா நாட்டு வீராங்கனையை எதிர்த்து விளையாடிய வினேஷ் போகாத், 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.   இதைத்தொடர்ந்து முன்னாள் மல்யுத்த வீராங்கனை […]