திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்! அக்.15ம் தேதி தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் 15ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தைத் தொடர்ந்து தற்போது நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் கொடியேற்றம், […]
தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]
பழனி முருகன் கோவிலில் அக்.1 முதல் புதிய தடை! மீறினால் நடவடிக்கை!

பழனி முருகன் கோவிலுக்கு நாளை முதல் செல்போன் மற்றும் வீடியோ கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நாளை அமலுக்கு வர உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களில் சிலர் ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். இது குறித்து எழுந்த […]
திருப்பதிக்கு செல்கிறீர்களா? உடனே இதை கவனியுங்கள்!

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) அக்டோபர் 12ம் தேதிவரை ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தினந்தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ‘‘சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் […]
ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம்? கட்டுமான தலைவர் முக்கிய தகவல்!

வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியின் மீது சூரியக்கதிர்கள் விழும் வகையில் கோவிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் […]
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு நாள்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் சென்னையில் […]
260 ஆண்டுகள் ஆகிவிட்டது! எக்ஸ் பக்கத்தை தெறிக்கவிடும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில்!

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடந்த செப்.23ம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வசந்த கால தொடக்க நாளில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த நாளில் பகல் மற்றும் இரவு வேளைகள் சமகால அளவில் இருக்கும். ஆண்டில் […]
திருப்பதியில் பக்தி மணம்! ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவம்!

திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த செப்.18ம் தேதி தொடங்கிய நிலையில் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள் […]
ஏழுமலையான் தரிசனம்! டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 10 மணி முதல் இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் தேவஸ்தான் அறிவித்துள்ளது. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் தினசரி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் புறப்பட்டு விடுகின்றனர். அந்தவகையில் தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. எனவே வழக்கத்திற்கும் மாறாக பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. […]
பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! அரிய புகைப்படங்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. கடந்த செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டன. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்க தேவையான அனைத்து பாதுகாப்பு பணிகளையும் சென்னை மாநகர காவல்துறை வெகு சிறப்பாக செய்திருந்தது. சென்னையில் […]

